Skip to main content

ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரருக்கு கரோனா!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020
mujeeb ur rahman

 

 

ஆப்கானிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர், முஜீப் உர் ரஹ்மான். ஐ.பி.எல்-லில் இவர் கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்காக ஆடி வருகிறார். மேலும், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும், பிக்பாஷ் (Big Bash) தொடரில் பிரிஸ்பேன் ஹீட்  அணிக்காக விளையாட இருந்தார்.

 

பிக்பாஷ் தொடரில் விளையாடுவதற்காக, கடந்த வாரம் தனது சொந்த ஊரான காபூலில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்துள்ளார் முஜீப். வெளிநாட்டிலிருந்து வந்ததால், அங்கு ஒரு ஹோட்டலில் தனிப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. இதனைத்தொடர்ந்து, முஜீப்பிற்கு காரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு காரனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

இதனையடுத்து முஜீப், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முழுவதுமாக குணமடையும் வரை, அவர் குயின்ஸ்லாந்தின் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருப்பார் என பிரிஸ்பேன் ஹீட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 

Next Story

“அவன் ஆப்கான் சிறுவன் அல்ல; இந்தியன்” - முஜீப் உர் ரஹ்மான் உருக்கம் 

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

Mujeeb Ur Rahman about the boy who tied himself up on the ground

 

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 13வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி இந்தத் தொடரில் தங்களது முதல் வெற்றியை ஆப்கானிஸ்தான் பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக முஜீப் உர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். 

 

இதனிடையே போட்டி முடிந்த பிறகு மைதானத்திற்குள்ளே வந்த ஒரு சிறுவன், முஜீப் உர் ரஹ்மானை கட்டிப்பிடித்து அழுதார். இந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து முஜீப் உர் ரஹ்மான், அந்த சிறுவன் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் அல்ல; இந்தியாவை சேர்ந்தவர் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “அந்த சிறுவன் ஆப்கானிஸ்தான் அல்ல; அவன் ஒரு இந்தியன். எங்களின் வெற்றிக்கு அவன் மிகவும் சந்தோஷமடைந்தான். கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல; அது ஒரு உணர்வு. உங்களின் ஆதரவுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணியின் போட்டிக்கு முன்பு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் செல்லும்போது ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது; இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தக்கோரிய வழக்கு - தொகுப்பாளருக்கு நோட்டீஸ்

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

court send notice to nagarjuna for bigboss show

 

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகர்ஜுனா தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி சமூக சீர்கேட்டுக்குக் காரணமாக உள்ளது எனக் கூறி நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி ஒரு பொதுநல வழக்கு ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

 

court send notice to nagarjuna for bigboss show

 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளும் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 14 நாட்களுக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.