Skip to main content

ஆன்லைன் ஜூம் இன்டெர்வியூவின் போது பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்?

 

zoom

 

இன்றைய நவீன உலகில் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றையும் ஆன்லைன்னில் பதிவிடுவது ட்ரெண்ட் ஆகிவிட்டது.

 

தற்போது, கரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் வேலை ஆட்களை நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி அமர்த்தி, அதிக லாபம் ஈட்ட திட்டமிட்டுள்ளனர்.

 

அதுமட்டுமின்றி, இன்றைய பெரும்பாலான முக்கிய ஒப்பந்தங்கள் அனைத்துமே ஆன்லைன் மூலமே நடைபெறுகின்றது. இதுபோன்ற சூழலில், பெரும்பாலான இன்டெர்வியூகள் ஆன்லைனில் நடப்பதால், நாம் எவ்வாறு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்? எப்படி உடை அணிந்து கொள்ளவது? என்பவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.

 

1) உடையில் சரியான கலரினை தேர்வு செய்க: பொதுவாக எல்லா விதமான இன்டெர்வியூக்கும்  உடையின் கலர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், அவை தான் உங்களிடம் இன்டெர்வியூ எடுப்போருக்கு உங்கள் மீது நல்ல பிம்பத்தை உருவாக்கும்.

 

உதாரணாமாக, நீங்கள் லைட் (வெளிர்) கலர் சுவருக்கு எதிராக உட்காரப் போகிறீர்கள் என்றால், நீல கலர்  உடையினை தேர்ந்தெடுங்கள். நீங்கள் டார்க் (அடர்) கலர் சுவருக்கு எதிராக உட்காரப் போகிறீர்கள் என்றால், அப்போது இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் மென்மையான வெளிர் நிறங்களில் உடைகளைத் தேர்வுசெய்வது பார்ப்பவருக்கு பிரகாசமாகத் தோன்றும்.

 

2) உடையின் கழுத்துப்பட்டை முக்கியமானது: பொதுவாக ஜூம் இன்டெர்வியூக்கு உங்கள் உடலின் மேல் புறம் மட்டுமே தெரியும் என்பதால், நீங்கள் அணிய தேர்வு செய்யும் ஆடையின் கழுத்துப்பட்டை மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு உயர்-கழுத்து ஒரு வட்டக் கழுத்து அல்லது ஆடை குறைப்பு என்பது சில சமயங்களில் உங்களைச் சற்று தடுமாறச் செய்யலாம்.  

 

அதற்குப் பதிலாக நீங்கள் வி-நெக் டீ-ஷர்ட் அல்லது டாப்பை எடுத்துக் கொள்ளுங்கள். காலர் சட்டையில் பட்டன் அவிழ்க்கப்படாது இருப்பது நல்லது.  

3) உடையினை சரிபார்த்துக் கொள்ளுங்கள்: உடை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பெரும்பாலான நிறுவனங்களில் நேரடி இன்டெர்வியூ செல்பவர்கள் பிளேஸர் (blazers) உடை அணிவது வழக்கம். ஆனால், ஜூம் இன்டெர்வியூவில் அதுபோன்ற ஆடை அணிவது குறைவு.

 

ஜூம் இன்டெர்வியூ ஆரம்பிக்கும் முன்பு, துணிகளைச் சுத்தம்செய்து மென்மையாக்குங்கள், அதில் அனைத்து பொத்தான்களும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், கறை, தையல் கிழிந்த மற்றும் சுருக்கங்கள் இல்லை என்பதனை உறுதிப்படுத்தி கொள்வது அவசியம். குறிப்பாக, ஆடைகளின் கீழ் இருந்து உள்ளாடைகள் காணப்படக்கூடாது.

 

cnc

 

4) தலைமுடி: உங்கள் தலைமுடி கருப்பாக இருந்தால், கருப்பு நிற உடையினை தேர்வு செய்யவேண்டாம்.

 

ஏனெனில்,  சில சமயங்களில் இந்த கலர் காமினேஷம் ஆன்லைன் ஜூம் இன்டெர்வியூக்கு சிறந்த தெளிவுத்திறனை வழங்காது. மேலும், இந்த கலர் காமினேஷன் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருக்கும் பட்சத்தில் உங்களை இன்டெர்வியூ செய்பவரைக் குழப்பவும் நேரிடும். எனவே, கறுப்புக்கு மாறாக மாறுபாட்ட கலர் உடையினை நீங்கள் தேர்வுசெய்வது சிறந்தது.

 

5) நகை: ஒரு ஆன்லைன் ஜூம் இன்டெர்வியூக்கு  நீங்கள் அதிக நகை அணிய வேண்டியதில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். எனவே, குறைந்தபட்ச ஆபரணங்களை அணிவது நல்லது. அழகாக வெட்டப்பட்ட நகங்கள் வேண்டும். தேவையான சிகை அலங்காரம் முக்கியமானவை.

 

பெரும்பாலான நபர்களுக்கு, இதுபோன்ற சில காரணங்களால் தங்களுக்கு தகுதி இருந்தும் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுவதாகச் செய்திகள் வெளியாகின்றனர். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் கூட, இது தொடர்பான சில காரணங்களுக்காக வேலை நிராகரிப்பு செய்யப்பட்டதாக பெண் ஒருவர் கருத்தைப் பதிவுசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.