Skip to main content

“ஜங்க் ஃபுட்களை ஏன் தவிர்க்க வேண்டும்” - சித்த மருத்துவர் ஷர்மிகா விளக்கம்

 

   “Why Avoid Junk Foods Totally” - Siddha Doctor Sharmika Explains

 

ஓம் சரவண பவ யூடியூப் சேனலுக்கு சித்த மருத்துவர் ஷர்மிகா நம்முடைய உணவு முறைகள் பற்றியும்; ஜங்க் ஃபுட்களை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அதை பின்வருமாறு விளக்கமாக காணலாம்.

 

நான் எப்போதுமே என்ன சாப்பிட வேண்டும் என்று தான் சொல்லுவேன். ஜங்க் உணவுகளை எப்போதுமே சாப்பிட வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். மாதத்திற்கு ஒரு நாள் சாப்பிடலாம். மற்ற நாட்களில் உங்கள் உடல் மீது கவனம் செலுத்தலாம்.  உடம்பை பார்த்துக் கொள்ளாத மனிதன், மனிதனே இல்லை. ஏன் என்றால் கடைசி வரைக்கும் நம்ம கூட வருவது நம் உடல் மட்டும் தான். நம்ம உடலுக்கு நாம் ஒரு நல்லது செய்தால், அது நமக்கு ஆயிரம் நல்லது செய்யும். நாம ஒரு கெடுதல் செய்தால், அதுவும் நமக்கு கெடுதல் செய்து விடும். 

 

நல்ல ஜங்க் உணவு என்று சொன்னால் பிரியாணி தான் என்று சொல்ல முடியும். வெளியே சென்று மீன், மட்டன் என்று சாப்பிடும் போதும் சரி. வேறு எந்த உணவு சாப்பிட்டாலும் சரி. எல்லா உணவும் ஒரு வகையில் ஜங்க் ஃபுட் தான். ஏன்னா ரீபைண்ட் ஆயில் தான் பயன்படுத்துவார்கள். ரோட்டு கடை உணவில் அளவு ரொம்ப கம்மியா தான் இருக்கும். அதாவது அன்றைக்கு தேவையான உணவை மட்டும் தான் செய்வார்கள். ஆனால், பயன்படுத்தும் எண்ணெய் ரீபைண்ட் ஆயில்.

 

நம் நாட்டைச் சாராத உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.  பீட்சா, பாஸ்தா எல்லாம் வெளிநாட்டு டிஎன்ஏ அந்த உணவை எடுத்துக் கொள்ளும். நம்ம உடலுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை. நம்ம உடலுக்கு ஒத்துக் கொள்ளாது.  நம்ம உடல் இது என்ன உணவு என்று தான் கேட்கும். ஒருவேளை வெளியே சென்று சாப்பிடும் போது, நம்ம ஊரு கொத்துகறி, மூளைகறின்னு சாப்பிடலாம். இந்த உணவுகளை வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், எப்போதாவது எடுத்துக்கொண்ட ஜங்க் உணவை,  நாம் இப்போது டெய்லி அல்லது இரண்டு நாளுக்கு ஒரு முறை சாப்பிட ஆரம்பித்து விட்டோம்.  நாம் பாக்குற வேலையும், மன அழுத்தம் நிறைந்ததாக மாறக் காரணமாக இரவு நேரங்களில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம்.

 

நம்ம மொபைல் ஆப் வழியாக உணவை ஆர்டர் செய்து சாப்பிடும்  வரைக்கும் நம்  உடம்பிற்கு ஆரோக்கியமே ஏற்படாது. நாம் முன்பு எல்லாம்  பழங்கள் நம்ம வீட்டில் வைத்து  இருந்தோம். இப்போது அப்படி இல்லை. டெய்லி நான் வெஜ் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். தினமும் வீட்டிற்கு செல்லும் போது பழங்களை  வாங்கி செல்லலாம். பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்வது என்பது உடலுக்கு நல்லது

 


 

இதை படிக்காம போயிடாதீங்க !