/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siblings.jpg)
உலகில் உள்ள மற்ற எல்லா உறவுகளையும் விட, உடன் பிறப்புகள் எப்போதும் நல்ல உணர்ச்சி பிணைப்புடன் காணப்படுகின்றனர்.
சில சமயங்களில் பெற்றோரை இழக்க நேரிடும் போது, உடன் பிறப்புகள் ஒருவருக்கொருவர் தாயாகவும் தந்தையாகவும் மாறுகின்ற நெகிழ்ச்சியான தருணங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட வீடுகளில் சகோதர உறவுகள் இல்லையென்பதால், அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான மற்றும் அற்புதமான உறவையும், சகோதர - சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.
உடன் பிறப்பு என்பது கடவுள் கொடுத்த வரம்.நாம் வெறுத்து ஒதுக்குவதற்கு அவர்கள் விரோதிகள் அல்ல, நம் குருதிகள். இந்த உணர்ச்சி பிணைப்பானது ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் வேறுபட்டிருக்கும்.
பெற்றோர் தங்களை வழி நடத்தும் விதம், வளர்ப்பு முறை, குடும்பம் தவிர்த்துமற்றவருடனான தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவை அவர்களின் குணங்களைத் தீர்மானிக்கின்றன. சில சமயங்களில்இராசி பலன்களை வைத்தும் அவர்களின் குணாதிசயங்கள் கணிக்கப்படுகின்றது.
இரண்டு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவர் ஒரே பாதையில் பயணிப்பது என்பது மிகுந்த சிரமமான ஒன்றாகும். குறிப்பாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள ராசி பலன்களை கொண்டவர்கள் ஒரே வீட்டில் இருக்கும் போது, ஏராளமாக பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
மேஷம் மற்றும் ரிஷபம்
மேஷ ராசிக்காரர்கள்அதிக ஆற்றல் நிறைந்தவர்கள். வீட்டில் தன்னிசையான சில முடிவுகளை எடுக்கும் தகுதி உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், ரிஷப ராசிக்காரர்கள் உறுதியானவர்கள். பொதுவாக, அவர்கள் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற பிடிவாதம் கொண்டவர்கள். எனவே, இந்த இரண்டு ராசி உடையவர்களும் ஒரே வீட்டில் இருந்தால், அவர்கள் ஒத்துப் போக வாய்ப்புகள் குறைவு.
கடகம் மற்றும் தனுசு
கடக ராசியை பொறுத்தவரை, அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், அன்பாகவும் இருக்க விருப்பம் உடையவர்கள். பெரும்பாலும், பிறருடன் சண்டையில் ஈடுபடுவதை தவிர்ப்பார்கள்.
உணர்ச்சிவசம் அதிகம் இருப்பதால் எளிதில் அவர்களைக் காயப்படுத்த முடியும். இவர்களுடன், தனுசு ராசி கொண்ட உடன் பிறப்புகள் இருந்தால் அவர்களின் உணர்ச்சிகளை எளிதில் காயப்படுத்தி விடுவார்கள். ஆகையால், இருவரும் தொடர்ச்சியான மோதல்களையும் கருத்து வேறுபாடுகளையும் அனுபவிக்கக்கூடும்.
மிதுனம் மற்றும் கன்னி ராசி
மிதுனம் மற்றும் கன்னி ராசி கொண்டவர்கள் பொதுவாக, அதிக புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் இருவருமே ஒரே சமயம் கோபமாகவும், கவலையாகவும் இருப்பார்கள். இருப்பினும், இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருக்கும் போது மாறுபட்ட கருத்து மோதல்கள் ஏற்படக் கூடும்.
சிம்மம் மற்றும் விருச்சிகம்
சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக மற்றவர்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்புவார்கள். விருச்சிக ராசி உடையவர்கள் தன்னிசையாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற சிந்தனை உடையவர்கள். இதனால், இருவருக்கும் இடையே தொடர்ச்சியான மாறுபட்ட கருத்து முரண்பாடு ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.
கும்பம் மற்றும் மகரம்
கும்ப ராசி உடையவர்கள் எப்பொழும் தங்கள் நலனில் அக்கறை செலுத்துவர். பிறரிடம் விட்டுக் கொடுக்காத குணம் படைத்தோர். மகர ராசிக்காரர்களோபிறரிடம் ஆதிக்கம் செலுத்தும் தன்மை உடையவர்கள். ஆகையால், பெரும்பாலான நேரங்களில், இருவரும் சண்டையிடுவதைக் காணலாம்.
மீனம் மற்றும் துலாம்
இவர்கள் இருவரும் நேர் எதிரான சிந்தனையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். துலாம் ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடும் தன்மை உடையோர்.
மீனம் ராசி கொண்டவர்கள் மென்மையானவர்கள், வாழ்க்கையின் பாதையில் செல்லக் கூடியவர்கள். இவர்கள்சிறு சொல்லைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத இளகிய மணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உடனான நீண்ட நாள் பயணம் அதிக பிரச்சனைகளை உருவாக்கும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)