Skip to main content

கண் பார்வை தெளிவடைய என்ன செய்ய வேண்டும் - விளக்குகிறார் டாக்டர் கல்பனா சுரேஷ்

 

 What to do to get clear eyesight - explains Dr. Kalpana Suresh

 

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் அதற்கு சரி செய்துகொள்ள வேண்டிய தீர்வுகள் குறித்தும் பிரபல கண் மருத்துவர் கல்பனா சுரேஷ் அவர்களிடம் நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த அறிவியல் பூர்வமான விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.

 

கண்ணை பாதுகாக்க இந்த தலைமுறையினர் ஸ்கிரீன்ஸ் (டிஜிட்டல் திரைகள்) பார்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக வெயிலில் திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் விளையாட வேண்டும். சூரிய ஒளி நேரடியாக உடலிலும், கண்ணிலும் பட்டாலே பாதி உடல் பிரச்சனைகள் சரியாகிவிடும். 

 

இரவு எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். அதனால் அடுத்த நாள் காலை கண் புத்துணர்ச்சியாக இருக்கும். மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அது கண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்கும். கண்ணுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக கேரட், பப்பாளி, மீன் உணவுகள், ஒமேகா 3 நிரம்பிய உணவுகள், நட்ஸ் வகைகள், கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 


 

இதை படிக்காம போயிடாதீங்க !