Skip to main content

“தக்காளி சாஸை சாப்பிட்டால் ஆபத்து?” - எச்சரிக்கும் மருத்துவர் அருணாச்சலம்

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

tomato sauce food health tips doctor interview


'நக்கீரன் நலம்' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நமது உடலுக்கு ஒத்துக் கொள்ளாதப் பொருளே ஒவ்வாமை என்போம். அதை அலர்ஜி என்றும் சொல்கிறோம். அதனால் ஏற்படுகிற அரிப்பு ரியாக்ஷனை மெடிக்கல் டெர்மில் ஹர்டிக் அரியா என்போம். நேற்று வரைக்கும் சாப்பிட்டவர்களுக்கு, உபயோகித்த ஒரு பொருளுக்கோ அது இன்னைக்கு ஏற்படுகிறது தான் அலர்ஜி. ஒவ்வாமை எதனால் ஏற்படுகிறது என்பது அவர்களுக்கு உடலில் எந்த இடத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பது பொறுத்து தான் சொல்ல முடியும்.

 

ஒருவருக்கு தோலில் ஒவ்வாமை ஏற்பட்டால், அதற்கு சோப்பு, ஷாம்பு போன்றவை காரணமாக இருக்கலாம். தூசியில் வேலை பார்ப்பவர்களுக்கு தூசி ஒத்துக் கொள்ளாமல் போயிருக்கலாம். காலையில் எழுந்ததும் தும்மல் வந்து கொண்டே இருக்கிறது என்பார்கள். அவர்களுக்கு மூக்கில் வரக்கூடிய ஒவ்வாமை. வாயில் அடிக்கடி புண் வருகிறது என்றால், ஒரு சாப்ட் ஆன பேஸ்ட் இருக்கும் போது, எதுக்கு இரிட்டபிள் பேஸ்ட்ட யூஸ் பண்ணணும்னு எனக்கு புரியவில்லை. உடலுக்கு மேலே உள்ள தோலை விட வாயிக்குள் இருக்கும் தோல் சாப்ட் ஆனது. அந்த மாதிரியான பேஸ்ட் ஏன் உபயோகிக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

 

முக்கியமாக நாக்கில் அலர்ஜி வருவதற்கு காரணம், ஒரு டூத் பேஸ்ட். அதே கம்பெனி இன்னொரு டூத் பேஸ்ட் வருது. அதைப் பயன்படுத்தினாலே அலர்ஜி வராது. பணமும் வெளிநாட்டுக்கு போகாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு நாளைக்கு ஐந்து பேரைப் பார்க்கிறேன். வாயில் வரக்கூடிய ஒவ்வாமை எல்லாவற்றுக்கும், பேஸ்ட்டுக்கு பிறகு அதிகமாக கல்யாண வீடுகளில் சமைக்கப்படும் வறுவல், பொறித்தலில் சேர்க்கப்படும் நிறமிகள் போன்ற உணவுகள் நமக்கு ஒத்துக் கொள்ளாமல் போகலாம். 

 

சிக்கன் சாப்பிடணும் ஆனால் அரிப்பு வரக்கூடாது என்று வருவார்கள். பால், முட்டை, மட்டன், சிக்கன், கடல் உணவுகள் உள்ளிட்டவைச் சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படலாம். சிலருக்கு கடல் உணவுகள் சாப்பிட்டால் மட்டுமே அலர்ஜி ஏற்படும். இதில், ஒரு சிலருக்கு நண்டு சாப்பிட்டால் ஒன்னும் செய்யாது. ஆனால், இறால் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். புது துணிகளால் கூட அரிப்பு வரலாம். சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு, லெமன் ஆகிய பழங்கள் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். 

 

நாய், பூனை, மாடு, ஆடுகள் உள்ளிட்ட வீட்டில் வளர்க்கக் கூடிய விலங்குகளால் கூட ஒவ்வாமை ஏற்படலாம். சோப்பு, ஷாம்பு, பர்ஃபியூம், பாடி லோஷன்ஸ் உள்ளிட்டவை ஒத்துக் கொள்ளாமல் கூட போகலாம். மருத்துவர்கள் தரும் மாத்திரைகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். நீங்கள் சென்று கடையில் வாங்கி சாப்பிடும் மருந்துகளால் கூட ஏற்படலாம். ஆஸ்துமாவும் அரிப்பு வகையைச் சேர்ந்த ஒவ்வாமை தான். அது நுரையீரலில் ஏற்படக் கூடிய ஒவ்வாமை.  

 

எல்லா பொருட்களில் இருந்தும் ஒவ்வாமை வரலாம். ஒரு ஒன்றரை வயது குழந்தைக்கு அரிப்பு என்று அந்த தாய் அனைத்து மருத்துவர்களையும் அணுகி குழந்தைக்கு சிகிச்சைப் பெற்றார். எனினும் சரியாகவில்லை. என்னிடத்தில் வந்தார். அப்போது, நான் குழந்தைக்கு என்னென்ன உணவுகளை தருகிறீர்கள் என்று எழுதி வாருங்கள் என்று சொன்னேன். குறிப்பாக, அரிப்பு ஏற்பட்ட ஆறு மணி நேரத்திற்கு முன்பு குழந்தைக்கு வழங்கப்பட்ட உணவுகள் குறித்து எழுதி வாருங்கள் என்று கூறினேன்.

 

அதில், பாலை தவிர டொமேடோ சாஸை வைத்து தான் குழந்தைக்கு இட்லி கொடுத்திருக்கிறார்; டொமேடோ சாஸை வைத்து தான் சாப்பாடு கொடுத்திருக்கிறார். டொமேடோ சாஸை மட்டும் நிறுத்தனாங்க. அந்த குழந்தை குணமாகிவிட்டது" என்றார். 

 

 

Next Story

நிபா வைரஸ் பரவல்; பொது முடக்கம் அறிவிப்பு

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
spread of Nipah virus; Public shutdown notice

கேரளாவில் நிபா வைரஸ், பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் அவ்வப்போது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது.

பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் ஏற்பட்டால் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு சோதனைகள் நிகழ்த்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் மருத்துவ கவுன்சில் குழுவினர் முகாமிட்டுள்ளனர். சிறுவனுடன் தொடர்பில் இருந்த 214 பேரில் 60 பேரை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதில் 14 பேருடைய பரிசோதனை மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சிறுவன் வசித்து வந்த மலப்புரம் பகுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினர் கேரளாவில் முகாமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சை பெற்றுவந்த 68 வயது முதியவர் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிபா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.

Next Story

உணவில் பிளேடு; விமான பயணிக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
blade in food to distributed by the air passenger;

கடந்த 9ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்வதற்காக ஏர் இந்தியா எனும் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணியான பத்திரிகையாளர் மதுரஸ் பால், விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது வேதனையைப் பதிவு செய்தார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஏர் இந்தியாவின் விமானத்தில் வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவு ஒன்றில் பிளேடு கிடந்தது. நான் அதை இரண்டு அல்லது மூன்று வினாடிகள் மென்று சாப்பிட்ட பிறகு அது என் உணவில் இருப்பதை உணர்ந்தேன். நான் அதை துப்பியவுடன், அது பிளேடு என்பது தெரியவந்தது. இதற்கு பணிப்பெண் மன்னிப்பு கேட்டார். மேலும் அவர், ஒரு கிண்ணம் கொண்டைக்கடலை வழங்கினார். எந்தவொரு விமானத்திலும் பிளேடு இருப்பது ஆபத்தானது. இரண்டாவது, அது என் நாக்கை வெட்டக்கூடும். மூன்றாவதாக, ஒரு குழந்தை இந்த உணவை சாப்பிட்டால் என்ன செய்வது’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இவர் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நடந்த சம்பவத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஒப்புக்கொண்டது. இது குறித்து தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா கூறுகையில், “எங்கள் கேட்டரிங் பார்ட்னர் பயன்படுத்தும் காய்கறிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தும் இயந்திரத்தின் பாகம் என நாங்கள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளோம். கடினமான காய்கறிகளை நறுக்கிய பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இனி இதுபோன்று நடப்பதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.