Skip to main content

நம்மை விட பெரிய மிருகங்களை சாப்பிடக்கூடாதா? - விளக்குகிறார் டாக்டர் அருணாச்சலம்

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

Shouldn't we eat animals bigger than us? - explains Dr. Arunachalam

 

நம்மை விட பெரிய மிருகங்களை சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்களே அது எந்த விதத்தில் சரியானது? பீஃப் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்ற கேள்வியை பிரபல டாக்டர் அருணாச்சலம் அவர்களிடம் நக்கீரன் யூடியூப் சார்பாக கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

மருத்துவ முறையில் எந்த விலங்குகளின் உணவையும் ஏற்பதும் மறுப்பதும் முடியாது அது கலாச்சாரம் சார்ந்தது அவ்வளவு தான். மாமிச உணவு என்பதை அனிமல்ஸ் புரோட்டீன் என்று மருத்துவ முறையில் சொல்கிறோம். எந்த விலங்கையும் குறிப்பிடுவதில்லை. அதே சமயத்தில் விலங்குகளிலிருந்து கிடைக்கிற பால், முட்டை, தோல், உறுப்புகள், தசை, கால்கள் எல்லாமே அனிமல்ஸ் புரோட்டீன் என்ற பட்டியலில் தான் அடங்கும். எல்லா விலங்கு உணவுகளிலும் நாம் எதிர்பார்ப்பது உயர் ரக புரதம் தான் 

 

உலக மக்கள் தொகையை கணக்கில் எடுக்கும் போது எட்டு கோடி மக்களுக்கும் விவசாயத்தின் மூலம் மட்டுமே உணவை நிறைவாகத் தந்து விட முடியாது. அதனால் தான் மாமிச உணவை மையமிட்ட உணவு வகைகளைத் தருகிற வியாபாரம் உள்ளுக்குள் வருகிறது. சீனாவில் பூச்சிகளை உண்ண ஆரம்பித்து விட்டார்கள். ஏனெனில் பூச்சிகளில் தான் புரதம் அதிகமாக உள்ளது. எளிமையாக கிடைக்கக் கூடிய, கொல்லுவதற்கும் எளிதாக சமைக்கவும் எளிதாக உள்ளதாகச் சொல்லி செய்கிறார்கள். 

 

நமக்கு அந்த பூச்சி உணவுகள் அருவருப்பு தன்மையை தரக்கூடியது. அப்படித்தான் பீஃப் சாப்பிடுவதையும் பார்க்கப்படுகிறது. நமது மூதாதையர்கள் சாப்பிடவில்லை, அதனால் நானும் சாப்பிடவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் வீடுகளில் சமைக்காமல் வெளியே போய் சாப்பிடுகிறார்கள். கேரளாவில் அதிக அளவில் மாட்டுக்கறி உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது பொருளாதாரம் சார்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஒரு மாடு பலருக்கு உணவாகும் என்ற அடிப்படையில் அதிகம் எடுத்துக் கொள்கிறார்கள் 

 

ஆட்டுக்கறியில் கிடைக்கிற புரதம் போல் தான் மாட்டுக்கறியிலும் இன்னும் சொல்லப்போனால் பன்றி இறைச்சியிலும் இருக்கிறது அதனால் இளம் வயதில் அனைவரும் பீஃப் சாப்பிடலாம். வயதான பிறகு ஜீரனத்தன்மையைப் பொறுத்து சாப்பிடலாம். எந்த விதமான கெடுதலும் கிடையாது.

 

 

 

Next Story

மாட்டுக்கறி சர்ச்சை; காங்கிரஸ் மீது பாஜக பாய்ச்சல்!

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Clash between Congress and BJP over beef
ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜகவின்  தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் ஆவேசமாக பேசியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய தமிழக பாஜக தலைவர், "எங்கள்  தலைமையகத்தை முற்றுகையிடும் தேதியை காங்கிரஸ் முன் கூட்டியே தெரிவித்தால், வரப்போகும் 10 பேருக்கு உணவு தயார் செய்வோம்" என்று பதிலடித் தந்திருந்தார்.

இது காங்கிரஸ், பாஜக கட்சிகளிடையே வார்த்தை போராக வெடித்தபடி இருந்த நிலையில், “பாஜக அலுவலகத்திற்கு வரும் தேதியை இரண்டு நாட்களுக்கு முன்பே சொல்கிறோம். எங்களுக்கு மாட்டுக்கறி உணவைத் தயாரித்து வையுங்கள்" எனப் பதிலடிக்கு பதிலடித் தந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இவர் உச்சரித்த மாட்டுக்கறி உணவு இரு கட்சிகளிலும் விவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இளங்கோவனின் மாட்டுக்கறி விசயத்தை கையிலெடுத்துள்ளது பாஜக. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், “மகாத்மா காந்தி வழி நடத்திய காங்கிரஸ் கட்சி, இத்தாலி சோனியா காந்தியின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற காங்கிரஸ் கட்சியினர் மாட்டுக்கறியைத்தான் சாப்பிடுகின்றனர் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிய வருகிறது.

காங்கிரஸ் அலுவலகத்திற்கும் இளங்கோவன் வீட்டிற்கு வருபவர்களுக்கும் மாட்டுக்கறி உணவு தான் பரிமாறப்படுகிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் இளங்கோவனும் மாட்டுக்கறி உணவு கேட்கிறார்.  மாட்டுக்கறி எனத் திரும்பத் திரும்ப பேசுபவர்கள், பன்றி இறைச்சி பற்றி பேச  மறுக்கின்றனர் அப்படி மறுப்பதன் மர்மம் என்ன வென்று தெரியவில்லை. எல்லாம் வாக்கு வங்கி படுத்தும்பாடு” என்று இளங்கோவன் மீதும், காங்கிரஸ் மீதும் பாய்ந்துள்ளார்.

ஏ.என்.எஸ்.பிரசாத்தின் இந்த அறிக்கை, காங்கிரஸ் தலைமையகமான  சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.