Skip to main content

அன்னை சரஸ்வதிக்கு தனி கோவில் எங்குள்ளது தெரியுமா?

மாணிக்க வீணை ஏந்தும்  மா தேவி கலைவாணி தேன் தமிழ் சொல் எடுத்து பாட வந்தேன் அம்மா பாட வந்தேன். கலைவாணி என்றவுடன் எனக்கு மட்டும் அல்ல. நிறைய பேருக்கு சரஸ்வதி சபதம் சினிமா நினைவு வரலாம். சில வருடங்களுக்கு முன்னர் வந்த நவீன சரஸ்வதி சபதம் படம் அல்ல. மிக பழைய சினிமா. ஆனால் எவர் கிரீன். கல்வியா செல்வமா வீரமா? என்ற மூன்று கேள்வி பதில்கள்  மூன்று கடவுள்கள் மூன்று கதாபாத்திரங்கள் என அதி அற்புதமான ஒரு திரைப்படம். அந்தப் படத்தின் வசனங்கள் ஒலிக்காத பகுதிகளே இல்லை எனும் அளவுக்கு புகழின் உச்சம் தொட்டது.

 

fd



நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். வீரத்திற்கு பராசக்தி, செல்வத்திற்கு மகாலட்சுமி என பல கோவில்கள் கேள்விப்பட்டு உள்ளோம். கல்வி அன்னை சரஸ்வதிக்கு தனி கோவில் எங்குள்ளது?

கூத்தனூர்

இரண்டாம் ராஜராஜ சோழன் தன்  அரசவை புலவர் ஓட்டக் கூத்தனுக்கு பரிசாக வழங்கியதால் கூத்தனூர் என்று அழைக்கப் பட்டது. ஓட்டக் கூத்தருக்கும் இங்கு தனி சன்னதி உண்டு. புலவர்கள் இறைவனுக்கு சமமாக  வணங்கப்  பட்டனர் என்பதற்கு நல்ல உதாரணம். மயிலாடு துறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் எனும் ஊரை ஒட்டி இத்தலம் அமைந்துள்ளது. சரஸ்வதிதேவி இத்தலத்தில் கருவறையில் கோவில் கொண்ட தெய்வமாக காட்சி அளிக்கிறாள். அம்பாள்புரி, ஹரி நாகேஷ்வரம் என பழங்காலத்தில் அழைக்கப்பட்ட இத் தலத்தின் விமானக் கலசம்  ஞான உருவாய் சரஸ்வதி தேவி அவதரிப்பை  குறிக்கும் வகையில் ஐந்து எனும் எண்ணிக்கையில் உள்ளது. 

கருவறையில் சரஸ்வதியின் வாகனமான அன்னப் பறவை கம்பீரமாக தேவியை பார்த்து உள்ளது. புலவர் ஒட்டக்கூத்தரை சிலர் சூழ்ந்து கொண்டு பரணிபாட வலியுறுத்திய போது புலவரின் நாவில் சரஸ்வதி தேவியே தமிழ் உருவாகி இறங்கியதாக ஐதீகம். பிறவி யிலேயே பேசும் திறன் அற்ற புருசோத்தமன் என்ற பக்தனுக்கு தனது  வெற்றிலை தாம்பூல எச்சிலை தந்து ஞான தீட்சிதர் ஆக்கிய பெருமை இத் தலத்தில் குடி கொண்டுள்ள அன்னை சரஸ்வதி தேவிக்கு உண்டு. சரஸ்வதி பூஜை அன்று பக்தர்கள் தேவியின் பாதங்களை தாங்களே பூஜிக்கும் வகையில் கருவறையில் இருந்து நீண்ட பாதங்கள் அமையும் வகையில் மலர்களால் அலங்கரிப்பது இத் தலத்தின் தனி சிறப்பு ஆகும்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...