Skip to main content

ஜெயிக்க நினைக்கும் பெண் தொழில்முனைவோர்களிடம் இருக்கவேண்டிய பொதுவான சில பண்புகள்!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

women

 

தொழில் துவங்குவதற்கான மூலதனத்தைப் பெறுவதில், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கணவன் தொழில் துவங்க நகைகளைத் தருவதற்கு பெண்கள் தயாராக இருக்கும் அதே சமயத்தில், பெண்கள் தொழில் துவங்க குடும்ப சொத்துக்களைப் பயன்படுத்த பெரும்பாலான ஆண்கள் சம்மதிப்பதில்லை. அதுமட்டுமின்றி, தொழில் துவங்க நினைக்கும் பெண்களை சமூகம் கேலி செய்து, பல இடங்களில் அவர்களை முடக்கிவிடுகிறது. தொழில் நிறுவனங்களை இயக்குவதற்கு ஆண்கள்தான் தகுதியானவர்கள் என்ற எண்ணமே இதற்கு முக்கியக் காரணம்.

 

இருப்பினும், இவற்றைக் கடந்து தொழிலில் வெற்றியடைந்த பெண் தொழில்முனைவோர்கள், தாங்கள் சமாளித்த சவால்கள் மற்றும் தங்களின் வளர்ச்சி போன்றவற்றில், ஒரே மாதிரியான மனநிலையைக் கொண்டுள்ளனர். இப்படி பல துறைகளில் வெற்றியாளர்களாக மகுடம் சூடிய பெண்களிடையே காணப்படும் பொதுவான சில பண்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

ஒரு தொழிலைத் தொடங்கும்போது அல்லது வழி நடத்தும்போது பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்ன?

தொழில் சிந்தனையும், நிர்வாகத்திறனும் ஒவ்வொரு பெண்ணிடமும் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. சிறுமிகளாக இருக்கும்போதே அவர்களிடம் ஒருங்கிணைக்கும் ஆற்றலும், வழி நடத்திச்செல்லும் ஆற்றலும் உருவாகிவிட்டதை நம்மால் ஒவ்வொரு வீட்டிலும் காண முடியும். அதுபோல் கற்றுக்கொள்ளும் திறனும், கற்றதை வெளிப்படுத்தும் திறனும் பெண்களிடம் அதிகம் இருக்கிறது. இருப்பினும், தொழில் முதலீட்டில் ஆண்களுக்கு கிடைக்கும் அதே சலுகை பெண்களுக்கு கிடைப்பதில்லை.

 

இதுகுறித்து, திவாடான்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜாமி ஸ்டிக்லியானோ கூறும்போது, “பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி பேசும்போது மூலதனம் எப்போதும் ஒரு பெரிய கருப்பொருளாகும். அதை எவ்வாறு பெறுவது என்பது மட்டுமல்லாமல், அதை எவ்வாறு முதலீடு செய்வது என்பதும் பல பெண்களுக்கு இன்றும் ஒரு பெரிய தடையாக இருக்கிறது” என்றார்.

 

ஆலோசனைகளைக் கேட்டு சொந்த முடிவுகளை எடுப்பவர்கள்:

“எனக்குத் தெரிந்த வெற்றிகரமான பெண் தொழில்முனைவோர்கள் அனைவரும், பெரும்பாலோர் பேசுவதை விட அதிகம் கேட்பவர்கள்” என்று டேனி எவர்சன், க்ளெமெண்டைனின் சேலன் மற்றும் ஸ்கின்கேரின் இணை உரிமையாளர் கூறியுள்ளார்.

 

இவர்கள் பெரும்பாலும், மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்பவர்கள். இருப்பினும், இறுதி முடிவை தாங்கள் மட்டுமே எடுப்பார்கள். குறிப்பாக, தாங்கள் எடுக்கும் முடிவுகள், தாங்கள் கொண்டிருக்கும் தகவல்களையும் (information), விவரங்களையும் பொறுத்தே அமையும்.  

 

சிறந்த சிந்தனையாளர்களாக இருப்பவர்கள்:

தொழிலில் வெற்றிபெற்ற பெண் தொழில்முனைவர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களாக இருப்பவர்கள். யோசனைகள், அறிவு, தொடர்புகள் போன்றவற்றைப் பகிர்தல், நம்பிக்கையின் மூலம் எளிதில் உறவுகளை உருவாக்குதல் போன்றவை சிந்தனையாளர்களின் பொதுவான முக்கியப் பண்புகள் ஆகும்.

 

இதுகுறித்து, பிரபல எழுத்தாளர் மைக்கேல் ஹையாட் கூறும்போது, "பல ஆண்டுகளாக, இரண்டு வகையான சிந்தனைகள் இருப்பதை நான் கவனித்தேன். ஒரு வகை வெற்றி, மகிழ்ச்சி மற்றும் நிறைவேற்றத்திற்கு வழிவகுக்கிறது. மற்றொன்று தோல்வி, பயம் மற்றும் அதிருப்திக்கு வழிவகுக்கிறது.” என்றார்.  

 

வணிக உரிமையாளராக இருப்பதில் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?

வணிக உரிமையாளராக இருப்பது அனைவருக்கும் வேறுபட்ட ஒன்று. மக்கள் வெவ்வேறு உந்துதல்கள், உத்வேகங்கள் மற்றும் அவர்கள் செய்யும் செயல்களைச் செய்வதற்கான காரணங்கள் உள்ளன. அதனுடன், வணிக உரிமையாளராக இருப்பதன் பலன் என்ன என்பதை அடையாளம் காண நேரம் ஒதுக்குவது முக்கியம். ஒட்டுமொத்த சவால்கள் மற்றும் வெற்றிகளில் கவனம் செலுத்துவது போன்று, ஒவ்வொரு நாளின் சிறந்த பகுதிகளைப் பற்றியும் பேசுவது முக்கியம்.

 

நீங்கள் உங்களது தொழிலில் உரிமையாளர் அல்லது முதலீட்டாளராக இருந்தால், உங்கள் தொழில் சார்ந்த விஷயங்களில் வாடிக்கையாளர்களைப் போன்று கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக, உங்கள் தொழிலில் ஒரு பணியாளராகவும், பங்குதாரராகவும் உங்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

எப்போதும் ‘பாசிட்டிவான'  எண்ணங்கள் கொண்டிருப்பார்கள்:

நம்முடைய தொழிலில், எல்லாம் நமக்கு சாதகமாக இருந்தால் நமக்கு எப்போதும் ‘பாசிட்டிவான' எண்ணங்களே ஆக்கிரமித்திருக்கும். அதேசமயம், தொழில் 'நெகட்டிவாக' செல்லும் பட்சத்தில் பெரும்பாலான தொழில்முனைவோருக்கு அதிலிருந்து வெளியேறும் எண்ணமே தோன்றும். வெளியேறும் எண்ணம் உள்ளவர்கள் தொழிலில் வெற்றி அடைந்ததில்லை. எந்த நிலையிலும் விடாமல் முயற்சி செய்தவர்களே வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

 

இதுகுறித்து வணிக உரிமையாளர் ஜாமி ஸ்டிக்லியானோ கூறும்போது, “நான் வார இறுதி மற்றும் எனது விடுமுறை நாட்களில் தொடர்ந்து பணியாற்றி வந்தேன். ஒரு வணிக உரிமையாளர் என்ற முறையில், ஒவ்வொரு நாளும் என்னுடைய உழைப்பினை  ‘பாசிட்டிவான' முறையில் அளித்தேன்” என்றார்.

 

வெற்றிக்கு, தோல்வியே முதல் படி என்பதை உணர்ந்தவர்கள்:

"எங்கள் அனுபவத்தில், அநேக பெண்கள் தாங்கள் எதைச் சாதிக்க முடியும் என்பதைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள்" என்று ஸ்கிஃப்மேன் கூறுகிறார். சில நேரங்களில், பெண்கள் தங்கள் நிறுவனங்களுக்கு எவ்வளவு வெற்றிகரமானவர் என்பதை உணர்ந்துகொள்ளாமல் வியாபாரத்தை உருவாக்குகிறார்கள். ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்திட மிகவும் அவசியமான இரண்டு விஷயங்கள் ‘சோதனை’ செய்து பார்ப்பது, மீண்டும் மீண்டும் ‘முயற்சிப்பது’. தொழிலில் வெற்றியடைந்த தொழில்முனைவோர் அனைவரும், இந்த இரண்டு விஷயங்களையும் கண்டிப்பாக கடைபிடிப்பவர்கள். எனவே, புதிதாக ஒரு தொழிலை உருவாக்க நினைக்கும் பெண் தொழில்முனைவோருக்கு இந்த இரண்டு விஷயங்களும் அவசியமானவையாகும்.

 

சில நேரங்களில், வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான வேறுபாடு உங்களுக்கான சரியான தொழிலைத் தேர்வு செய்வதைப் பொருத்து அமையும். சில சமயங்களில் சந்தை நிலவரம் (market conditions)  உங்களுக்கு சாதகமாக இல்லாமல் போகும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், நீங்கள் தேர்வு செய்யும் தொழில் உங்களுக்கு வெற்றியடையாமல் போகும். இறுதியில் உங்களது விடாமுயற்சியே வெற்றியைத் தரும் என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

தொல்லியல் துறை கொடுத்த ஒரு நாள் சர்ப்ரைஸ்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Women's Day Celebration; Notification issued by Department of Archaeology

இன்று (08.03.2024) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பல சுற்றுலாத் தலங்களில் இன்று இலவச அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளை பார்வையிடப் பயணிகளுக்கு இன்று இலவச அனுமதி அளித்துள்ளது தொல்லியல் துறை. இதனால் மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களை பார்வையாளர்கள் இன்று கட்டணமின்றி கண்டு களிக்கலாம்.

அதேபோல் புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான சித்தன்னவாசலில் இன்று ஒருநாள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் மூவர் கோயில் சித்தன்னவாசலில் எந்தவித கட்டணமும் இன்றி இன்று சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.