Skip to main content

மூன்று நாட்கள் யூரின் வராதவருக்கு 15 நிமிடத்தில் நடந்த ஆச்சர்யம் - ‘பல்ஸ் பேலன்சிங்’ உமா வெங்கடேஷ் விளக்கம்

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Pulse Balancing Uma venkatesh

 

காஸ்மிக் எனர்ஜி மூலம் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்று கூறும் பல்ஸ் சமநிலை நிபுணர் உமா வெங்கடேஷ் அவர்கள், பல்வேறு உணவு முறைகள் மற்றும் எளிமையான செயல்களின் மூலம் எவ்வாறு ஆரோக்கியத்தை அடைய முடியும் என்பது குறித்து நமக்கு விளக்குகிறார்.

 

பச்சைப் பூசணியை மிக்ஸியில் அடித்துக் குடித்தால் ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது. உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். தேவைப்படும் வரை அதை எடுத்துக்கொண்டால் போதும். பூசணியில் திருஷ்டி கழித்தால் அசுத்தங்களை அது சுத்தம் செய்யும். வேப்பிலைக்கும் அந்த சக்தி உண்டு. அதனால்தான் பேய் பிடித்தவர்களுக்கு கிராமங்களில் வேப்பிலை அடிப்பார்கள். இப்படி ஒவ்வொன்றுக்குப் பின்னும் ஒரு காரணம் இருக்கிறது. குறைவான செலவில் நல்ல மருத்துவத்தை நாம் பரிந்துரைக்கிறோம். ஒருவருக்கு மூன்று நாள் சிறுநீர் வராமல் இருந்தது. நம்முடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டு அவர் நம்மிடம் வந்தார். கடவுள் மேல் பாரத்தைப் போட்டு நீடில்  சிகிச்சை செய்தேன். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு சிறுநீர் வெளியேறியது. காலங்கள் எவ்வளவு கடந்தாலும் சிகிச்சைக்கான கட்டணத்தை நான் மாற்றவில்லை. அக்குபஞ்சர் சிகிச்சையில் 5 வருட கோர்ஸ் படித்தேன். ஆர்வம் அதிகம் என்பதால் மாற்று மருத்துவம் குறித்து நிறைய தெரிந்துகொண்டேன். 

 

தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொண்டாலே இரத்த அழுத்தம் குறையும். தலைவலி இருப்பவர்கள் ஒரு டம்ளர் தேங்காய் பால், தண்ணீர், பனங்கற்கண்டு ஆகியவை சேர்த்து ஒருநாள் முழுவதும் குடித்து வந்தால் தலைவலி குணமாகும். இலவங்கம், ஏலக்காய், பட்டை ஆகியவற்றை நன்கு நுணுக்கி அகல் விளக்கில் போட்டு ஒருநாள் முழுவதும் ஊறவிட்டு, மறுநாள் திரி போட்டு விளக்கை ஏற்றினால் வீட்டுக்கு வருபவர்களின் தீய எண்ண ஓட்டங்கள் சக்தியிழந்து போகும். நேர்மறையான சக்தி பெருகும். இதை அனைவரும் தங்களது வீட்டில் செய்யலாம். இதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம். முதலில் கண் எரிச்சல் ஏற்படும். அதன்பிறகு சரியாகிவிடும். பெரிய குவளையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் ரோஜா இதழ்களைப் போட்டு இரவு ஊறவைத்துவிட்டு, காலையில் முகத்தை அதற்குள் கொண்டுபோய் நாக்கை நீட்டி, கண்களை நன்கு திறந்து பார்த்து உருட்ட வேண்டும். இது ஆக்சிஜனை நன்கு பரவச் செய்யும். கண்களை மேலும் ஆரோக்கியமாக்கும்.

 

 

 

Next Story

வரப்போகும் தலைமாற்று அறுவை சிகிச்சை; மிராக்கல் கொடுத்த 'பிரைன் பிரிட்ஜ்'

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
upcoming head transplant; Viral video

மனித உடல் உறுப்புகளின் திடீர் செயலிழப்புகள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் உறுப்பு செயல் இழப்புகளைத் தடுப்பதற்காக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதயம் முதல் கல்லீரல் வரை, கண்கள் முதல் சிறுநீரகம் வரை என உடல் உறுப்புகள் மாற்றப்படுவது இப்பொழுது சர்வ சாதாரணம் முறையாக மாறி வருகிறது. குறிப்பாக அண்மை காலமாகவே மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு தேவைப்படுவோருக்கு மாற்றி பொருத்தப்படுவது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வருங்காலத்தில் தலையையே மாற்றி வைத்துக் கொள்ளும் அறுவை சிகிச்சை முறை வரப்போவதாக ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ தற்பொழுது இணையவாசிகளால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் நிறுவனமான 'பிரைன் பிரிட்ஜ்' என்ற நிறுவனம் வீடியோ ஒன்றை கடந்த மே 22ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது மருத்துவ உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காரணம் மனிதனின் உடலில் எத்தனை அமைப்புகள் இருந்தாலும் அடையாளம் காணப்படும் முக்கிய அமைப்பாக இருப்பது முகமும் தலையும்தான். அதனை மாற்றியமைக்கும் சிகிச்சைக்கான அந்த வீடியோதான் இந்த சிலாகிப்புக்குக் காரணம்.

'பிரைன் பிரிட்ஜ்' நிறுவனம் தொடர்ந்து தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறது. ரோபோக்களின் உதவியுடன் இந்த அறுவை சிகிச்சை எப்படி சாத்தியம் என்பது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. ஆட்டோனோமஸ் சர்ச்சிக்கல் ரோபோஸ் வகை ரோபோக்கள் ஒரு மனிதனின் உடலில் இருக்கும் தலையை மற்றொரு மனிதனுக்கு மாற்றும்படியாக அந்த வீடியோ அமைந்துள்ளது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது ஒருபுறம் இருந்தாலும் நரம்பியல் நோய்கள் உள்ளவர்கள் மற்றும் கேன்சர் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்படும் விதமாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ உலகில் இதுவும் ஒரு மைல் கல்லாக அமையுமா இல்லையா என்பது விரைவில் தெரியவரும் என்கின்றனர் மருத்துவ உலகினர். இந்த ஆய்வு ஒருவேளை வெற்றிகரமாக முடிந்தால் இன்னும் எட்டு வருடத்தில் தலைமாற்று அறுவை சிகிச்சை நடைமுறைக்கு வரும் என  'பிரைன்  பிரிட்ஜ்'  நிறுவனத்தின் தலைமைத் தெரிவித்துள்ளது மருத்துவ உலகிற்கு மிராக்கல் கொடுத்துள்ளது.

Next Story

சிரித்த முகத்துடன் சென்ற ராஜேஷ் தாஸுக்கு திடீர் நெஞ்சுவலி!

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Rajesh Das, who went with a smiling face, had a sudden chest pain

தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பீலா வெங்கடேசன் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இவரின் முன்னாள் கணவரான தமிழகத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கடந்த 21 ஆம் தேதி அவரின் நண்பர்களுடன் பீலா வெங்கடேசனின் பண்ணை வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பீலா வெங்கடேசன் இது குறித்து புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார், ராஜேஷ் தாஸ் மீது கொலை மிரட்டல், சட்ட விரோதமாகக் கூடுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே ராஜேஷ் தாஸ் வசித்து வரும் வீட்டில் கடந்த 20 ஆம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பீலா வெங்கடேசன் தமிழக அரசின் எரிசக்தித் துறையின் முதன்மை செயலாளராக இருப்பதால் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ராஜேஷ் தாஸ் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதே சமயம் ராஜேஷ் தாஸ் வசித்து வரும் வீட்டின் மின் இணைப்பு பதிவு பீலா வெங்கடேசன் பெயரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தற்போது அவர் மின் இணைப்பு வேண்டாம் எனக் கூறி அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வீட்டுக் காவலாளியைத் தாக்கிய வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கேளம்பாக்கம் போலீசாரால் இன்று (24.05.2024) காலை கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவரை கேளம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து கிட்டத்தட்ட 4 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. விசாரணையில் காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. காவலர்களிடமே மிரட்டும் தொனியில் அவர் பேசியதாக கூடுதலாக 353 என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது.தொடர்ந்து அவர் காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜராவகதற்காக நீதிமன்றத்திற்குள் சிரித்த முகத்துடன் சென்ற ராஜேஷ் தாஸ் இறுதி நேரத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். உடனடியாக வெளியில் கைத்தாங்கலாக அழைத்து வந்த காவல்துறையினர் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி. பின்னர் நீதிமன்ற பிணையில் ராஜேஷ் தாஸ் விடுவிக்கப்பட்டார்.  

தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண் காவல் கண்காணிப்பாளருக்குக் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சிக்கியவர் ராஜேஷ் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.