Skip to main content

பெண்களின் மாதவிடாய் துயருக்கு புதிய தீர்வு! - பாகிஸ்தானில் அறிமுகம்

Published on 01/03/2018 | Edited on 01/04/2018

 

பாகிஸ்தானில் 44 சதவிகிதம் பெண்கள் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நாப்கின் போன்ற வசதிகள் இல்லாமல் பணியாற்றும் இடங்கள் மற்றும் பள்ளி போன்ற இடங்களில் அவதிப்பட்டு வருகின்றனர். அதை கருத்தில் கொண்டு வாஸ்மா இம்ரான் மற்றும் மஹின் கான் என்ற இருவர் மாதவிலக்கிற்கு கப் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
 

period


 

period

 

இதைப்பற்றி வாஸ்மா கூறுகையில், "பாகிஸ்தான் பெண்கள் மாதவிலக்கு விஷயங்களில் விழிப்புணர்வு இன்றியும் அதற்கான சரியான வசதிகள் இன்றியும் பள்ளி, பணியாற்றும் இடம் என அவதிப்பட்டு வருகின்றனர், பாகிஸ்தானில் மட்டுமல்ல உலக அளவில் மாதவிலக்கு காலங்களில் பெண்கள் பள்ளிக்கு போவதில்லை இதை சுலபமாக்க நாங்கள் இந்த கப்பை உருவாக்கியுள்ளோம்" என கூறினார்.
 

period

 

மஹின் கான் கூறுகையில், "இங்கே மாதவிலக்கு பற்றி ஆண்களுக்கு தெரியாது அதைப்பற்றி பொது இடங்களில் பேசவும் முடியாத நிலை இன்னும் இங்குள்ளது இதையெல்லம் உடைக்கவே இந்த கப்பை உருவாக்கியுள்ளோம்."

 

period

 

"நாங்கள் உருவாக்கிய இந்த மாதவிடாய் கப் பெண்களின் மாதவிலக்கு பிரச்சனையை கண்டிப்பாகத் தீர்க்கும். உடலுக்கேற்ற சிலிகானில் உருவாக்கப்பட்டிருக்கும் இது வழக்கமான சானிட்டரி நாப்கின் பயன்பாட்டை விட சுலபமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். ஒரு பெண் தனது ஆயுள் முழுவதுமே ஐந்து அல்லது ஆறு கப்பை உபயோகித்தால் போதும். இதனால், சுற்றுச் சூழலுக்கு கேடாக அமையும் நாப்கின் கழிவுகள் பெருமளவில் குறையும். இதை விரைவில் சந்தைப்படுத்தவும் உள்ளோம்" எனவும் கூறினார். ஏற்கனவே இது போன்றவை அறிமுகமாகியிருந்தாலும் பாகிஸ்தானில் இவர்கள் தான் இதை அறிமுகம் செய்து பெண்கள் மத்தியில்  பரப்புகின்றனர்.      

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் பேசியதால் ஆத்திரம்; சிறுமியை ஆற்றில் தூக்கி வீசிய தந்தை

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Father throws girl into river Yamuna after talking to boyfriend

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி ஒருவர். இவர் தனது ஆண் நண்பருடன் பேசியிருக்கிறார். இது சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவர அவரது தந்தை சிறுமியைத் திட்டியுள்ளார். அத்துடன் உடனடியாக சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ள சிறுமிக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாததால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை சிறுமியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். 

இந்த நிலையில், சம்பவத்தன்று தந்தை சிறுமியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். சிறுமியின் தந்தை தனது நண்பர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், குருகிராம் செல்லும் வழியில் யமுனை ஆற்றின் மிதவை பாலத்தில் மூவரும் வந்துகொண்டிருந்த போது, தந்தை சிறுமியின் கழுத்தைத் துணியால் நெரித்துள்ளார். பின்பு அவரும் அவரது நண்பரும் சேர்ந்து சிறுமியை ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். ஆற்றில் அடித்துக்கொண்டு போன சிறுமியின் கதறல் கேட்டு ஆற்றுப்படுகையில் உள்ள மக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் புகாரின் பேரில் சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர் இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குழந்தைகள் நல அதிகாரிகளிடம் சிறுமி தனக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறியுள்ளார். பின்னர், சிறுமி பாதுகாப்பாகக் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Next Story

அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிய பள்ளி மாணவி!

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
schoolgirl who worked as a conductor in a government bus

கர்நாடக மாநிலம் அப்சல்பூர் கட்டஹாரா கிராமத்தைச் சேர்ந்த வித்யா 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி வித்யாவிற்கு பேருந்து நடத்துநராகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி வித்யா தன்னுடைய நடத்துநர் ஆசை குறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மாணவி வித்யாவின் ஆசையைக் கேட்ட அதிகாரிகள் அதனை நிச்சயம் நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளனர். முதலில் மாணவி வித்யாவிற்கு எவ்வாறு பயணச்சீட்டு கொடுக்க வேண்டும் என்று பயிற்சி கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவி வித்யா கட்டஹாரா வரை செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணி செய்ய அனுமதி அளித்தனர். 

பின்னர், அதன்படி அப்சல்பூரில் இருந்து கட்டஹாரா வரை செல்லும் அரசுப் பேருந்தில் மாணவி வித்யா நடத்துநராகப் பணி செய்தார். அவருடன் நடத்துநரும் இருக்கையில், பயணிகளிடம் எங்கு செல்கிறார்கள் என்று கேட்டு, உரிய பயணச்சீட்டை வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் மாணவிக்கும், அவரின் ஆசையை நிறைவேற்றிய போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இணையவாசிகள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.