Skip to main content

உடல் எடையை விரைவாகக் குறைக்க 3 எளிய டிப்ஸ்!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

how to reduce weight quickly

 

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், உடல் எடையினை குறைப்பது என்பது இந்த தலைமுறையினருக்கு மிகுந்த சவாலாக உள்ளது. உடல் எடை குறைய உடற்பயிற்சி செய்தால் போதும் என்று இருந்துவிடுவது எந்தப் பலனையும் தராது.

 

உடல் எடை குறையாமல் இருக்க நமது உணவுப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணமாகும். எனவே, நமது உணவுப் பழக்கங்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் வாழலாம்.

 

அதற்காக, உடல் எடையைக் குறைக்க உணவைத் தவிர்க்கவேண்டும் என்பதல்ல, சில ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றி உடல் எடையினை விரைவாகக் குறைக்கலாம்.

 

உடலை ஒல்லியாகக் காட்ட உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது போன்றவை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவற்றைத் தவிர்த்து உடல் எடையினை சுலபமாகக் குறைக்க ஆரோக்கியமான 3 எளிய வழிகள் உள்ளன. இவற்றைப் பின்பற்றினால் நமது உடல் எடை இரட்டிப்பாகக் குறையும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 

முட்டை மற்றும் கீரை;

 

how to reduce weight quickly

 

வேகமான எடை குறைப்பிற்கு காலை உணவாக முட்டையைச் சாப்பிடுவது உலகம் முழுவதும் தற்போது பரவலாக இருக்கும் உணவு முறையாகும். முட்டையில் இருக்கும் வைட்டமின் D மற்றும் கால்சியம் சத்துகள் உடலின் கொழுப்பைக் கரைப்பது மட்டுமின்றி நம்மை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது.

 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பல வழிகளில் உதவியாக இருக்கும் முட்டையுடன் வேறு சில ஆரோக்கியமான பொருளைச் சேர்க்கும் போது, உடல் எடை குறைவதில் இருமடங்கு பலன்களைத் வழங்கக்கூடியது.

 

முட்டையுடன், இரும்புச்சத்து அதிகமுள்ள கீரையைச் சேர்த்துச் சாப்பிடுவது தேவையற்ற கரிகளைக் குறைப்பதுடன் அதிக அளவு  ஊட்டச்சத்துக்களையும் நமக்கு வழங்கும்.

 

மேலும்,  கீரைகளைச் சாப்பிடுவது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. தசை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் வலிமையை அதிகரிக்கிறது.

 

வேர்க்கடலை மற்றும் ஆப்பிள்;

 

how to reduce weight quickly

 

ஆப்பிள்களில், நார்ச்சத்து, வைட்டமின்கள், ஊட்டச் சத்துக்கள் போன்றவை அதிக அளவில் இருப்பதால், இவை எளிதில் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.

 

வேர்க்கடலை, மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளால் நிரம்பியுள்ளது. இவை உடல் எடையினை குறைக்க உதவுகிறது. மேலும், இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகவும் அமைகின்றது.

 

இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடும் போது, உடல் எடையினை வெகுவாகக் குறைக்கிறது.

 

எலுமிச்சை மற்றும் கிரீன் டீ;

 

how to reduce weight quickly

 

பல்வேறு ஆய்வுகளின் படி, கிரீன் டீ என்பது உடல் எடையினை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த பானமாக உள்ளது. அதேபோன்று, தினமும் காலையில் சூடான நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து குடித்து வந்தால், உடல் எடை வேகமாகக் குறையும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே, இவை இரண்டையும் சேர்த்துக் குடித்து வந்தால் உடல் எடை விரைவாகக் குறையும்.

 

கிரீன் டீயை தூளாக வாங்கி பயன்படுத்துவதை விட, உலர்த்திய கிரீன் டீ இலைகளை வாங்கி,  வெந்நீரில் போட்டு, மூடிவைக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களில் கிரீன் டீயின் ஃபிளேவர் வெந்நீரில் கலக்கும். இதில், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் உடல் எடையினை குறைத்து, உடல் ஆரோக்கியத்தைத் தரும்.

 

மேலும், கிரீன் டீ  ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை, வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது. இவற்றுடன், சர்க்கரை மற்றும் பால் சேர்ப்பது முற்றிலும் தவறு.

 

எனவே, உடல் எடையினை விரைவாகக் குறைக்க முயல்பவர்கள் இந்த 3 எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். இவை, உடல் எடை குறைப்பது மட்டுமின்றி, நாம் அனைவருக்கும் ஆரோக்கியமாகவும் வாழ வழிவகுக்கும்.

 

 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

டன் கணக்கில் பிடிபட்ட போலி இஞ்சி பேஸ்ட்; பொதுமக்களே உஷார்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Tons of fake ginger paste caught; Public beware

உணவு பொருள்களின் தரம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், போலியான கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த வீடியோக்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் டன் கணக்கில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு தரம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் போல ஹைதராபாத்தில் சில நபர்கள் பாக்கெட்டுகளில் போலியாக இஞ்சி பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் மற்றும் வண்ணம், பசை ஆகியவற்றை கலந்து இந்த போலி இஞ்சி பேஸ்ட் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 டன் அளவில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.