Skip to main content

கடின உழைப்பால் சாதித்த சேலம் பெண்!

Published on 08/03/2019 | Edited on 09/03/2019

சேலம் அம்மாப்பேட்டையில் வசிக்கும் ஆறுமுகம் மற்றும் கெளரி தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இதில் மகளே மூத்தமகள் ஆவர். இவரின் பெயர் வனிதா ஆறுமுகம். தந்தை விசைத்தறி கூலி தொழில் செய்து வந்தார் . அவருக்கு உதவியாக இவரின் மனைவியும் அதே வேலையை கவனித்தார் . இந்நிலையில் எதிர்பாராத விதமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.  இந்நிலையில் மூத்த மகளாக உள்ள வனிதா அவர்கள் தான் பத்தாம் வகுப்பின் படிப்பிற்கு பிறகு "Diploma in Fashion Designing" தனியார் கல்லூரியில் சேரந்து முடித்து விட்டு சுய தொழிலான "தையற் தொழில்" செய்து வந்தார்.  எனவே வீட்டில் இருந்த ஒரே ஒரு தையல் மெஷின் வீட்டிலிருந்த வாறே தையற் தொழிலை செய்ய தொடங்கினார். இந்நிலையில் தனது தம்பிகளான கனகராஜ் மற்றும் விஜய சாரதியும் தந்தை தொழிலை மேற்கொள்ள அதிலும் நஷ்டம் ஏற்பட குடும்ப பாரத்தை முழுவதும் வனிதா மேல் விழுந்தது. 
 

womens day special

இந்நிலையில் வனிதா அவர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து குடும்ப நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி வந்தார். தனது 22 ஆம் வயதில் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் கணவரின் ஆதரவுடன் தொடர்ந்து விடா முயற்சியில் ஈடுபட்டார். தையல் தொழிலுடன் "தையல் வகுப்பு" நடத்தி வந்தார். இத்துடன் பியூட்டிசன் வகுப்பு செல்ல ஆசைப்பட்ட அவர் சேலம்  , கோவை , சென்னை போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார் வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். மேலும் வனிதா அவர்கள் நம்மிடம் கூறும் போது 2006 ஆம் ஆண்டு சேலம் நான்கு ரோடு பகுதியில் Naturals , Green trends இணையான வகையில் "Tulips Medspa" என்னும் பெயரில் புதிய அழகு நிலையம் தொடங்கினேன். பின் குஜராத் ,டெல்லி , கர்நாடகா பல மாநிலங்களுக்கு சென்று வகுப்புகள் எடுக்க தொடங்கினேன். பத்தாம் வகுப்பு வரை பயின்ற எனக்கு ஆங்கிலம் தொடக்கத்தில் கடினமாக இருந்தது. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்தேன். பிறகு பல மாநில அழகு கலை நிபுணர்கள் நட்பு கிடைத்தது. இதன் பயனாக சேலத்தில்  நடந்த  நடிகர்கள் நடிகைகளுக்கான கலை நிகழ்ச்சியில் மேக் ஆப் செய்ய வாய்ப்பு கிடைத்தது. 
 

இதில்  முன்ணணி நடிகைகளுக்கு மேக் அப் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து சேலத்தில் சிறந்த பியூட்டி பார்லருக்கான  "Artic" Awards - 2018 ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு  தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு  "V to V Wedding Planner & Event Management " நிறுவனத்தை தொடங்கி இன்று வரை சிறப்பாக நிறுவனத்தை நடத்தி வருகிறோம். இதில் சிறப்பம்சங்கள் என்னவென்றால் கல்யாண வீட்டில் வாழை மரம் முதல்
உணவு தயாரித்தல் , ஆடைகள் , பூக்கள் , ஹால் டெக்கரேசன் , மேளதாளம் , வீடியோ உட்பட கல்யாண இறுதி வரை இருந்து சிறப்பிக்கும் வகையில் A to Z என பெயரிட்டோம். இது சேலம் மாநகரில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 

மேலும் சகோதரி வனிதா அவர்கள் கூறுகையில் கடின உழைப்பு , விடா முயற்சியும் இருந்தால் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொண்டு  பெண்ணால் சாதிக்க முடியும் என கூறினார். இதனை தொடர்ந்து சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஆலோசனைகளை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் , வேலை வாயப்புகளை ஏற்படுத்தி தரவும் தயாராக இருக்கிறேன் என நம்மிடம் கூறினார். உலகெங்கும் வாழும் மகளிர்கள் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறி விடைப்பெற்றார். எனவே நாம் அனைவரும் பெண்களை மதிப்போம் ! பெண்களுக்கு ஊக்கம் அளிப்போம்! உலகத்தை அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்ற பாதையில் அழைத்த செல்ல உறுதியேற்போம்!

 

பி . சந்தோஷ் , சேலம் 


 

 

Next Story

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை! 

Published on 12/05/2024 | Edited on 12/05/2024
New record on Tamil Nadu Urban Habitat Development Board 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கடந்த 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக வீட்டுவசதி, குடிசைப்பகுதி மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு போன்ற பல்வேறு திட்டங்களை குடிசைப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த செயல்படுத்தி வருகிறது. இந்த வாரியம் தொடக்கத்தில் சென்னையில் மட்டுமே தனது பணிகளைச் செயல்படுத்திக் கொண்டிருந்தது. இதனையடுத்து கடந்த 1984ஆம் ஆண்டு முதல் தனது பணிகளை தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக நகர்ப்புற பகுதிகளிலும் விரிவாக்கம் செய்தது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்ற உயரிய நோக்கத்தினை கொண்டதாகும். குடிசைப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை நிலைநாட்டவும், குடிசைவாழ் மக்கள் வாழும் இடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்புகள், அடிப்படை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மனைகள், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

New record on Tamil Nadu Urban Habitat Development Board 

இந்நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை படைத்துள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் ரூ. 3 ஆயிரத்து 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 ஆயிரத்து 824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 2 ஆயிரத்து 78 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் 69 ஆயிரத்து 701 புதிய தனி வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மகளிர் தினத்தில் மனைவிக்காக சமைத்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி! வைரலாகும் வீடியோ! 

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

Senior IAS officer cooked for wife on Women's Day.  Video goes viral!

 

மாநிலத்தின் உயர் பதவியில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று ஒருநாளாவது என் துணைவியாரின் வேலை பளுவை குறைக்க சமைக்கப்போகிறேன் எனச்சொல்லி சமையல் அறையில் காய்கறிகளை நறுக்கி சமையல் செய்யும் வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது இந்தியா முழுவதுமுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று தந்துள்ளது.

 

அசாம் மாநிலம் உள்துறை, அரசியல், பொதுநிர்வாக செயலாளராக இருப்பர் மணிவண்ணன். இவர் தமிழ்நாட்டில் ஆந்திரா எல்லையோரம் திருவள்ளுவர் மாவட்டத்துக்கு உட்பட்ட அத்திமாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர். படித்ததெல்லாம் தமிழகத்தில் தான். பட்டப்படிப்பு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தார். பின்னர் ஒன்றிய அரசின் சிவில் சர்விஸ் தேர்வுக்கு படித்து தேர்ச்சி பெற்றார். வடகிழக்கு மாநிலங்களில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. அசாம் மாநில கேடர் அதிகாரியாக பணியாற்ற துவங்கினார்.

 

Senior IAS officer cooked for wife on Women's Day.  Video goes viral!

 

இயற்கை வளங்கள் நிறைந்த இந்தப்பகுதியில் மரங்கள் அடிக்கடி வெட்டப்பட்டன. இதனை தடுக்கவும், வனத்தை உருவாக்கவும், அங்குள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பெரியளவில் மரச்செடிகள் நடப்பட்டு பெரும் வனத்தையே உருவாக்கினார். இதனை அசாம் மாநில முதலமைச்சரே நேரில் வந்து பார்த்துவிட்டு பாராட்டினார். அசாம் மாநிலத்தில் எளிய மக்களின் நம்பிக்கை அதிகாரியாக பணியாற்றினார்.

 

அரசின் சில பதவி உயர்வுக்கு பின்னர் தற்போது அசாம் மாநில உள்துறை, அரசியல், பொதுநிர்வாக செயலாளராக பணியாற்றி வருகிறார். மிக முக்கியமான இந்த பதவியில் அதிகளவில் அரசுப்பணிகள் இருந்தபடியே இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று தன் துணைவியாருக்கு சமையல் பணியில் உதவ களமிறங்கியுள்ளார். அவரே சாதம், சாம்பார், பொறியல் செய்து அசத்தியுள்ளார். தான் சமைத்ததை தன் மனைவி, மகன், மகளுக்கு பரிமாறியுள்ளார்.

 

நான் ஐ.ஏ.எஸ், நான் சமையல் செய்வதுபோல் போட்டோ, வீடியோ வெளியே வந்தால் என் இமேஜ் என்னவாது என்கிற போலி கவுரவம் பார்க்காமல், அவர் சமையல் செய்யும் வீடியோவை அவரது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இது அசாம் மாநிலத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பணியாற்றிவரும் அவரது பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கவர்ந்துள்ளது. இந்த செயலை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

Senior IAS officer cooked for wife on Women's Day.  Video goes viral!

 

மணிவண்ணன் குறித்து அவரது பால்ய நண்பர்கள் நம்மிடம் பேசும்போது, “ஏழ்மையான குடும்பம், படிப்பு மட்டுமே தன்னை உயர்த்தும் என்கிற நம்பிக்கையோடு படித்து தேர்வெழுதி பணியில் சேர்ந்தவர். அசாம் மாநிலத்தில் ஏழை, விவரமறியாத மக்களுக்கு தன் அதிகாரத்தின் வழியாக என்னென்ன நன்மை செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துகொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்புதான் தனக்காக, தன்குடும்பத்துக்காக கிராமத்தில் சொந்தமாக வீடுகட்டினார். சொந்த வீடு தேவை என்கிற அவரது தந்தையின் கனவு. ஓலைகுடிசையில், மழைவந்தால் மண் சுவர் இடிந்துவிழுந்துவிடுமோ என வாழ்க்கை நடத்தியவர்கள். தனது தந்தையின் கனவை இப்போதுதான் அவரால் நிறைவேற்ற முடிந்தது. பெரிய மாளிகையெல்லாம் நடுத்தர வர்க்கத்தினர் கட்டும் வீடுபோன்றுதான் அவரால் கட்ட முடிந்தது. அந்த வீடு புதுமனை புகுவிழாவில் திருவாசம் ஓதவைத்தார். இப்படி வித்தியாசமானர், மக்களுக்காக சிந்திப்பவர்” என்றார்கள்.

 

அழகான தன் குடும்ப வாழ்க்கைக்கு பரபரப்பான அதிகார அலுவலக பணியிலும் நேரம் ஒதுக்கியதோடு, நான் அதிகாரி என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் சமையல் வீடியோவை வெளியிட்டு உலக மகளிர் தினத்தை கொண்டாடியது மகிழக்கூடியதே.