Skip to main content

10 நிமிடத்தில் பளபளப்பாக மாற இதை செய்தால் போதும்..!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

ஒருவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவர்கள் முகத்தில் முகப்பருக்கள் வந்தால் அவர்களின் பொலிவு இயல்பாகவே குறையும். அந்த வகையில் முகப்பருக்களுக்கு டாட்டா சொல்ல முக்கிய மருத்துவ பொருள் நம் அனைவரின் வீடுகளிலும் உள்ள கடுகு எண்ணெய். இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம். கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்கி சிறிதளவு உப்பு சேர்த்து முகத்தில் தடவி, 10 நிமிடம் முகத்தை மென்மையாக மசாஜ் செய்துவிட வேண்டும். நாம் செய்வதை விட நண்பர்கள் உதவியுடன் செய்யும் போது பலன் அதிகம் கிடைக்கும்.  பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அப்படி செய்து வந்தால் முகம் வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். 

 

d



மேலும் பருக்களால் ஏற்பட்ட புள்ளிகளை நீக்க, கடலை மாவுடன் தயிர் மற்றும் கடுகு எண்ணெய்யை சேர்த்து அவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து புள்ளிகள் உள்ள இடங்களில் பூசி,  15 நிமிடம் கழித்து முகத்தை  கழுவி வர ஒரு வாரத்தில் அந்த புள்ளிகள் இருந்த இடம் காணமல் போகும். கடுகு எண்ணெய் இல்லை என்றால் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம் என்று சிலர் கூறுவதும் உண்டு. அது முற்றிலும் தவறான ஒன்று. ஆலிவ் எண்ணெய் நரம்புகளுக்கு புத்துணர்வு தரும் என்பதே உண்மை. அதற்கு பருக்களை குணப்படும் தன்மை இல்லை என்பதே எதார்த்தம். எனவே அதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

 

 



 

Next Story

கடவுள் தேசத்தின் அழகி... கைத்தட்டக் காத்திருக்கும் இந்தியா!

Published on 28/08/2020 | Edited on 29/08/2020

 

kerala - nimmy koshy -Mrs -United Nations- 2020 - Mrs - india - elegant - 2019

 

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா இயற்கையின் விளைநிலம். பச்சைப் பசேலென்று படர்ந்து அடர்ந்துள்ள காடுகளும், மலைகளும், பாய்ந்தோடும் அருவிகளும், ஜிமிக்கி கம்மல்களும், கறுப்புச் சட்டைகளும் கேரளத்தின் அடையாளத்தைப் பறைசாற்றுகிறது. இனி கேரளத்தின் அடையாளமாக நிம்மி கோஷியும் நம் நினைவு அடுக்குகளில் நிறைந்து இருப்பார். திருமணம் ஆனதும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் பணிவிடை செய்து கிடப்பதே விதியென நினைக்காமல், தனக்கான விதியைத் தானே எழுதத் துடிக்கும் பல்லாயிரம் பெண்களில் நிம்மி கோஷியும் ஒருவர். ஐக்கிய நாடுகளில் இருந்து ‘திருமதி அழகிகள்’ கலந்துகொள்ளும் “மிஸ்சஸ் யுனைட்டெட் நேஷன் 2020” அழகிப் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள தயாராகி வருகிறார் நிம்மி கோஷி.


மத்திய அரசு அலுவலராக நிம்மியின் அப்பா இருந்ததால், கோயம்புத்தூர், திருச்சி, சென்னை, பெங்களுரு, புதுவை, ஹைதராபாத், பூனே, திருவனந்தபுரம் என எல்லா ஊர்களும் எல்லாப் பண்பாடுகளும் பழக்கம் ஆகிவிட்டதாக பகிர்ந்துள்ளார் நிம்மி. முதுகலைப்பட்டம் முடித்துள்ள நிம்மி கோஷிக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆசிரியையாகப் பணியாற்றி வரும் நிம்மி, இப்பணியின் மூலம் நல்ல மனிதர்களாக மாணவர்களை உருவாக்கி சமூகத்தின் உண்மையான சொத்துகளாக மாற்ற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். திருமணமான பெண்களுக்கு வாய்ப்புகள் அருகி வரும் காலத்தில் பல்வேறு தடைகளைக் கடந்துதான் திருமதிகள் வெற்றி பெறுவதாக நிதர்சனம் பேசுகிறார்.

 

சிறு வயதில் இருந்தே பரதநாட்டியம் மீது தீவிர காதல் கொண்ட நிம்மி, அதை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். மேலும், வசதியற்ற மாணவர்களுக்கு இலவசமாக பரதநாட்டிய வகுப்புகளை எடுத்து வருகிறார். கேரளாவில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வெற்றியை எப்படி அளவிடுகிறீர்கள் எனக் கேட்ட போது? “நான் வெற்றிகளைப் பொருளாதார அளவீடுகளைக் கொண்டு அளவிடுவதில்லை, மாறாக வாழ்க்கைத் தரத்தை வைத்தே மதிப்பிடுகிறேன்” என்கிறார் நிம்மி. எனது பெற்றோர்கள் எதற்காககவும் என்னை அழவிட்டதில்லை, பிரச்சனைகளை நேர்மையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்ள கற்றுத் தந்துள்ளனர் என்கிறார்.

 

kerala - nimmy koshy -Mrs -United Nations- 2020 - Mrs - india - elegant - 2019

 

ஒரு நாடு நாகரிகமான நாடக இருக்கும் பட்சத்தில் அங்கே பெண்கள் சரி சமமாக மதிக்கப்படுவர். தனக்கான துணையைத் தானே தேர்வு செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றவர்களாகவும் இருப்பர் எனக் கூறியுள்ள நிம்மி, அழகு என்பதற்கு நமது சமூகம் பல்வேறு தவறான கற்பிதங்களைக் கொண்டுள்ளது என்கிறார். அழகு என்றால் பிறரை வசீகரிப்பது, கவர்ச்சியை வைத்து பல விசயங்களைச் சாதித்துக் கொள்வது என்பதெல்லாம் அழகுக்கான அர்த்தம் அல்ல. பாலைவனத்தில் பூத்த பூக்களும், ஆழ்கடலில் கிடக்கும் விலைமதிப்பற்ற கற்களும் கடைசி வரை யாராலும் கொண்டாடப்படுவதே இல்லை. இதுபோல்தான், பலரின் திறமைகள் பேசப்படாமல் போனதற்குக் காரணமே, இச்சமூகம் அழகின் மீது கொண்டுள்ள தவறான அபிப்பிராயங்களே. என்னைப் பொறுத்தவரை உண்மையான அழகு என்பது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் யாராவது ஒருத்தருக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் யாருக்காகவாவது பயனுள்ளவராக இருக்க வேண்டும். அதுதான் அழகு. மற்றபடி உடல் அழகு என்பது கூடுதல் சிறப்பாக வேண்டுமானால் இருக்கலாம்.

 

எனது பெற்றோரின் உந்துதலால் சிறு வயதிலிருந்தே கலை நிகழ்சிகளில் கலந்து கொள்வேன், அப்படித் தான் முதன் முதலாக தேசிய அளவிலான ‘மிஸ்சஸ் இந்தியா எர்த் -2019’ அழகிப் போட்டியில் கலந்து கொண்டேன். அதன் இறுதிச் சுற்று வரை முன்னேறினேன். அதில் நான் ‘மிஸ்சஸ் இந்தியா எலகன்ட்” விருதைப் பெற்றேன். இதன்மூலம், எனக்கு “மிஸ்சஸ் இந்தியா யுனைட்டெட் நேஷன் -2020” விருது கிடைத்தது.  இதனால், வருகிற  26 அக்டோபர் 2020 அன்று, ஐக்கிய நாடுகளின் போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் சர்வதேச “மிஸ்சஸ் யுனைட்டெட் நேஷன் -2020” போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்க இருக்கிறேன். எனக்கு இது மிகவும் பெருமையான தருணம். மிகவும் தீவிரமாக இதற்காக பணியாற்றி வருகிறேன். இந்தியாவின் சார்பாக நான் மகுடம் சூடப் போகும் அந்த மகத்தான நாளை எண்ணி காத்திருக்கிறேன். இதுவரை நடைபெற்ற யுனைட்டெட் நேஷன் போட்டியில் இரண்டு இந்தியப் பெண்கள் மகுடம் சூடியுள்ளனர் நான் மூன்றாவதாக இருப்பேன் என நம்பிக்கை மிளர சொல்கிறார் நிம்மி.

 

http://onelink.to/nknapp

 

அடுத்த தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது நிம்மி சொன்ன பதில், “வரும் தலைமுறைக்கு இந்த உலகை இன்னும் மேம்பட்ட நிலையில் விட்டுச் செல்ல விரும்புகிறேன்.  மரம் ஒருபோதும் தன் கனிகளை தானே உண்பதில்லை, ஆறு ஒருபோதும் தன் நீரை தானே குடிப்பதில்லை, சூரியன் தனக்காக மட்டுமே ஒளிர்வதில்லை, ஒருவருடன் ஒருவர் இணைந்து வாழ்வதுதான் இயற்கையின் விதி” என்று சொல்லி முடித்தார்.

 

இரண்டு குழந்தைகளின் அம்மா, ஆசிரியை, குடும்பத் தலைவி என்னும் பல பொறுப்புகளுக்கு மத்தியில் சாதிக்கத் துடிக்கும் நிம்மி போன்றோரை நாடே எழுந்து, கைத்தட்டி, உச்சிமுகர்ந்து பாரட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை!

 

மகுடம் சூட வாழ்த்துகள் நிம்மி சேச்சி....!
 

 

 

Next Story

பெண்ணின் அழகில் ‘கணிதம்’ உண்டு!-கண்ணில் மின்னும் பொன் விகிதம்!

Published on 24/11/2019 | Edited on 24/11/2019

நண்பர் ஒருவரின் குடும்பம், தங்கள் மகனுக்கு வரக்கூடிய மனைவி வெகு அழகானவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெண் தேடியபடியே இருக்கிறது.  ‘அது என்ன அழகு?’ என்று கேட்டோம். “பார்க்கிறதுக்கு மூக்கும் முழியுமா செதுக்கி வச்ச சிலை மாதிரி இருக்கணும்..” என்றார்கள். அவர்களிடம் நாலடியாரைக் கொஞ்சம் எடுத்துவிட்டோம்.

‘குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு’

முழுமையாக அர்த்தம் புரிந்ததோ இல்லையோ, சிரித்துவிட்டு “நாங்கள் தேடுவதும் படித்த அழகான பெண்தான்.” என்று அழகு குறித்த அவர்களின் கொள்கையில் உறுதியாக இருந்தனர்.

பெண்ணின் அழகு குறித்து ஓவியர் ஒருவர் இப்படிச் சொல்கிறார் -

 

There is mathematical beauty in the beauty of a woman!


“ஒரு பெண் எப்படி இருக்க வேண்டுமென்று முன்னோர்கள் வகுத்தே வைத்திருக்கின்றனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயவங்களும் அமைந்துவிடுவதில்லை. உச்சி முதல் பாதம் வரை ஒரு இளம் பெண் எப்படியிருக்க வேண்டுமென்று முன்னோர்கள் வகுத்தே வைத்துவிட்டனர். அதுதான் சாமுத்திரிகா லட்சணம். பெண்களின் கண்கள் எப்படியிருக்க வேண்டுமென்று சாமுத்திரிகா லட்சணம் சொல்கிறது தெரியுமா? ‘சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று மாவடுபோல் இருக்க வேண்டும். பாலில் விழுந்த வண்டுபோல் கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். புருவம் வில்லைப்போன்று வளைந்திருக்க வேண்டும்.’ என, கண்கள் குறித்து மட்டுமல்ல.. மூக்கு, நெற்றி, காது, கழுத்து, இடை, தொடை என காலின் கட்டை விரல் வரைக்கும் விலாவாரியாக விவரித்துள்ளது.’ என்றார்.

 

There is mathematical beauty in the beauty of a woman!


கணிதத்திலும்கூட ‘பொன் விகிதம்’ உண்டு. இது, கவின்கலை, ஓவியம், கட்டிடக்கலை, புத்தக வடிவமைப்பு, இயற்கை, இசை, நிதிச்சந்தை என பல்வேறு துறைகளிலும் பரந்து காணப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டிலிருந்து, ஓவியர்கள், கட்டிடக் கலைஞர்கள் பலரும் தமது படைப்புகளில் பொன் விகிதத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். பொன் விகிதமானது அழகியல் அடிப்படையில் மனதுக்கு உகந்தது என நம்பப்படுகிறது.  

உலகப் பிரசித்திபெற்ற மோனாலிசா ஓவியம் தங்க விகிதத்தின்படியே (1:0.618) லியொனார்டோ டா வின்சி-யால் வரையப்பட்டுள்ளது. இத்தங்க விகிதமானது மனித உடல் முழுவதும் காணப்படுகிறது. ஒரு தங்க செவ்வகம் என்பது தங்க விகிதத்தைப் பிரதிபலிக்கும் பரிமாணங்களைக் கொண்ட ஒரு செவ்வகமாகும். மோனாலிசா ஓவியம் முழுவதுமே பல தங்க செவ்வகங்களைக் கொண்டுள்ளது. த லாஸ்ட் சப்பர், ஓல்ட் மேன் மற்றும் தி விட்ருவியன் மேன் போன்ற ஓவியங்களின் சில பகுதிகளும் தங்க விகிதத்தின்படி டாவின்சியால் வரையப்பட்டவையே.  

 

There is mathematical beauty in the beauty of a woman!


அட, ‘நிரந்தர உலக அழகி’ என இன்றுவரையிலும் கொண்டாடப்படும் ஐஸ்வர்யா ஆர்.பச்சனும் இந்தப் பொன் விகிதக் கணக்கில்தான் வருகிறார். எப்படி தெரியுமா? ஒருவரின் முகத்திலுள்ள மூக்கின் நீளம், கண்களின் இருப்பிடம் மற்றும் தாடையின் நீளம் ஆகியவை தங்க விகித நியமனப்படி அமைந்தால் அவர் அழகாக இருப்பார். ஐஸ்வர்யா ஆர்.பச்சனின் முகமானது தங்க விகித அமைப்புகொண்ட முகமூடியுடன் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதனால், அவரது அழகும் கணிதத்தன்மை வாய்ந்ததே!  

அழகு ரசனைக்குரியதே! ஆனாலும்,  ‘புற அழகைக் காட்டிலும் அக அழகே உயர்ந்தது’ என பாடம் நடத்தினால்,  புரிதலுடன் நம்மில் எத்தனைபேர்  முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள்?