Einstein playing violin

உலகில் தலைசிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வாசித்த வயலின் அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் 516,500 டாலர்களுக்கு ஏலம்போனது. இந்திய மதிப்பில் சுமார் 3.35 கோடியாகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் வயலின் மற்றும் அவர் எழுதிய கடிதங்கள் ஆகியவைஅமெரிக்காவை சேர்ந்த போன்ஹம்ஸ் எனும் ஏல நிறுவனம்இதனை ஏலம்விட்டது. இந்த ஏலமானது தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் ஏலத்தில் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

Advertisment

 Einstein playing violin

Advertisment

அறிவிக்கப்பட்ட அடிப்படைவிலையை விட ஐந்து மடங்கு ஏலம் போனது. இந்த வயலின் ஐன்ஸ்டைனுக்கு பரிசாக கொடுக்கப்பட்டது. 1933ஆம் ஆண்டு பிரிஸ்டன் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற பொழுது, ஆஸ்கர் ஸ்ட்ரெஜ்ர் என்பவர் வயலினை பரிசாக வழங்கினார். அந்த வயலினில் ஐன்ஸ்டினை பற்றி ஒரு வாக்கியத்தை எழுதியிருந்தார்." இவ்வுலகின்மிகச்சிறந்த அறிவியல் பேராசிரியர் ஐன்ஸ்டைனுக்காகத் தயாரிக்கப்பட்டது"என்று குறிப்பிட்டுபிப்ரவரி 1933 என்று தேதியையும்குறிப்பிட்டிருந்தார்.

பின்னர்,பிரிஸ்டன் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தலாரன்ஸ் ஹிப்ஸ் என்பவரின் மகனுக்குஅந்த வயலினை பரிசாக அளித்துவிட்டார்.

இந்த வயலின் வாசிப்பு குறித்து ஐன்ஸ்டைன் கூறியுள்ளது "இசையில்லாத என் வாழ்வுநினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. என் பகல் கனவிலும் இசைதான், என் வாழ்வை நான் இசை வழியாகத்தான் பார்க்கிறேன், இந்த இசை என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியை அளித்தது".