Skip to main content

உலர் திராட்சையில் இருக்கும் அற்புதமான பலன்கள்!

Published on 25/02/2020 | Edited on 26/02/2020

உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு திராட்சை மிக நல்ல ஊட்டச்சத்தான உணவு பொருளாகும். உலர் திராட்சையை பாலுடன் கொதிக்க வைத்து தினமும் ஒரு கிளாஸ் அருந்தினால் பிறக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். கால்சியத்தின் அளவு உலர் திராட்சைகளில் மிக அதிகமாக இருக்கின்றது.  உலர் திராட்சை பழத்தை நீருடன் கொதிக்க வைத்து அருந்தினால் வயிற்று வலி பிர்ச்சனை சரியாகி விடும். எலும்புகள் வலுபெறுவதற்கு உலர் திராட்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
 

JK



உடல் வலியால் அவதியுறுபவர்கள் சிறிதளவு பெருங்காயத்துடன் உலர் திராட்சை சேர்த்து கசாயம் போன்று செய்து குடித்து வந்தால் உடல் வலி பறந்து போகும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியினை குணப்படுத்த சிறந்த மருத்துவ பொருளாக உலர் திராட்சைகள் இருக்கின்றது. இதயத்துடிப்பு வேகமாக இருப்பவர்கள் உலர் திராட்சையை தொடர்ந்து எடுக்கும் போது இதயத்துடிப்பு சீராவதுடன் பதட்டம் குறைகின்றது. உடல் எடை கணிசமாக அதிகரிப்பதற்கு உலர் திராட்சைகள் பெரிதும் பயன்படுகின்றது.

 

Next Story

டன் கணக்கில் பிடிபட்ட போலி இஞ்சி பேஸ்ட்; பொதுமக்களே உஷார்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Tons of fake ginger paste caught; Public beware

உணவு பொருள்களின் தரம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், போலியான கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த வீடியோக்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் டன் கணக்கில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு தரம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் போல ஹைதராபாத்தில் சில நபர்கள் பாக்கெட்டுகளில் போலியாக இஞ்சி பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் மற்றும் வண்ணம், பசை ஆகியவற்றை கலந்து இந்த போலி இஞ்சி பேஸ்ட் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 டன் அளவில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தூக்கமின்மையால் சுகர் வருமா? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

 Kirthika Tharan | Nutrition | Diebetes |

 

உடற்பயிற்சி செய்தும் சரியான உணவு முறையை பின்பற்றியும் மன அழுத்தம் நிறைந்து தூக்கமின்மையால் அவதியுற்றால் டயாப்பட்டீஸ் வருமா என்ற கேள்விக்கு பிரபல ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம் அளிக்கிறார்.

 

தூக்கமே வரமாட்டேன் என்கிறது, ஒழுங்காக தூக்கமே இல்லாமல் தவிப்பதாக வெளிநாடு வாழ் தமிழர் தம்பதியினர் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்கு 17 நாள் விதவிதமான முறையில் மன அழுத்தம் குறைத்து தூக்கம் வர வைக்க முயன்றும் தூக்கம் வரவேயில்லை என்றார்கள். சரி உடல்நிலையையும் கவனிக்க வேண்டும் என்று இரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னேன். பரிசோதனை முடிவில் டயாப்பட்டீஸ் இருப்பதை உறுதி செய்ய முடிந்தது.

 

அந்த தம்பதியினரால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்புகள் நடக்கிறோம், உடற்பயிற்சிகள் செய்கிறோம். ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையோடு தான் உணவு எடுத்துக் கொள்கிறோம் அப்படியிருக்கையில் எங்களுக்கு டயாப்பட்டீஸ் வர எப்படி வாய்ப்பிருக்கிறது என்று கேட்டார்கள். அவர்களால் நம்பவே முடியவில்லை. சுகர் செக் மானிட்டர் எடுத்து வரச்சொல்லி பரிசோதித்தால் அதுவும் அதிக அளவு காட்டியது. இளம் வயதிலேயே எங்களுக்கு டயாப்பட்டீஸா? நாங்கள் ஆயுசுக்கும் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று அதற்கு தனியாக டிப்ரசன் ஆக ஆரம்பித்தார்கள்.

 

எல்லாமே சரி செய்ய முடிகிற பிரச்சனை தான் என்று அவர்களை சமாதானப்படுத்தி நூறு நாட்களுக்கு அவர்களுக்கு டயட் சார்ட் தயாரித்து கொடுத்தேன். அசைவப்பிரியர்கள் என்பதால் மீன், சிக்கன், மட்டன் போன்றவற்றை எடுத்துக் கொள்ள பரிந்துரைத்தேன். குறிப்பாக மட்டன் சூப்கள் அதிகம் எடுத்துக் கொள்ள பரிந்துரைத்தேன். சின்சியராக நான் சொன்னதை பின்பற்றினார்கள். தூக்கத்தின் அவசியம் குறித்தும் தொடர்ச்சியாக சொல்லி வந்தேன்.

 

மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை எடுத்துப் பார்த்த போது டயாப்பட்டீஸ் அளவு மிகவும் குறைந்திருந்தது. தூக்கமின்மையாலும் டயாப்பட்டீஸ் வர வாய்ப்பிருக்கிறது என்பதை அந்த தம்பதியினர் உணர்ந்து கொண்டு சரியான தூக்கத்தினையும் உடற்பயிற்சி உணவு ஆகியவற்றை எடுத்துக் கொள்வதாக உறுதி எடுத்துக் கொண்டார்கள்.