Skip to main content

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

  DrSuganthan | Karunai kilangu| Ayurvedic medicine

 

வள்ளலார் பரிந்துரைத்த கிழங்குகளில் மிகவும் அற்புதமான கிழங்கு கருணைக்கிழங்கு. இதை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து  ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்.

 

கிழங்கு வகைகளில் கண்டிப்பாக நாம் சாப்பிட வேண்டிய ஒரு கிழங்கு கருணைக்கிழங்கு. இதைச் சாப்பிடுவதால் மூலம் சம்பந்தமான வியாதிகள் குணமாகும். சித்தர்கள் அனைவரும் பரிந்துரைக்கும் முக்கியமான கிழங்கு இது. பித்தம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கருணைக்கிழங்கு ஒரு வரப்பிரசாதம் தான். உணவை சரியான முறையில் செரிமானம் செய்வதற்கு கருணைக்கிழங்கு உதவுகிறது. 

 

இப்போது நாம் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு தான் அதிகமாக கொடுக்கிறோம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிள்ளைகளுக்கு நாம் கருணைக்கிழங்கு தர வேண்டும். மூலநோய் ஏற்பட்டவர்களுக்கு கருணைக்கிழங்கு தொடர்ந்து வழங்கப்படுகிறது. கருணைக்கிழங்குகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அதில் நமக்கு கிடைப்பது ஒரு வகை தான். மற்றவை மலைப்பிரதேசங்களில் கிடைக்கும். கருணைக்கிழங்கு சாப்பிட்டால் அறுவை சிகிச்சை செய்வதற்கான தேவை குறையும். புளிக்கரைசலில் அரைமணி நேரம் ஊறவைத்தால் அமிர்தம் போன்ற சுவை தரக்கூடியதாக கருணைக்கிழங்கை நிச்சயம் மாற்ற முடியும். 

 

கருணைக்கிழங்கை மசியலாகவும், லேகியமாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் கருணைக்கிழங்கு லேகியம் சாப்பிடலாம். கருணைக்கிழங்குடன் மோரையும் சேர்த்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். இதில் அதிகம் மிளகாய் தூள் சேர்த்து கொடுக்கக்கூடாது. அகத்திக்கீரை சேர்த்து கருணைக்கிழங்கை சமைத்துக் கொடுப்பது நல்லது. 

 

இதன் மூலம் உட்காரவே முடியாமல் சிரமப்படுபவர்கள் கூட வித்தியாசத்தை உணர்வார்கள். குடல் சார்ந்த பிரச்சனைகளால் தான் நிறைய பேருக்கு பைல்ஸ் ஏற்படுகிறது. குடல் சார்ந்த பிரச்சனைகளையும், பித்தத்தையும் தணிக்கக் கூடியதாக கருணைக்கிழங்கு இருக்கிறது. மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கிழங்கும் புளித்த கீரையும் சாப்பிட வேண்டும் என்று வள்ளலார் சொல்கிறார். இது உடல் சூட்டைத் தணித்து மலமிளக்கியாகவும் செயல்படும். எனவே கருணைக்கிழங்கை ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு முறையாவது நாம் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் குறட்டைக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா? - மயக்க மருந்து நிபுணர் கல்பனா விளக்கம்!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Dr Kalpana | Snoring | Child |

 

குறட்டையால் பாதிக்கப்படுகிற குழந்தைகளை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் என்ன நடக்கும், குறட்டையால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும் போது, மயக்கமருந்து நிபுணர்களின் அவசியம் குறித்து மயக்கவியல் நிபுணர் டாக்டர் கல்பனா நமக்கு விளக்குகிறார்.

 

குறட்டை பிரச்சனையால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இரவில் குறட்டை விடுகிற குழந்தைகளுக்கு பல பிரச்சனைகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதை சரியாக கவனிக்க வேண்டும். 

 

ஒரு குழந்தை தூங்கும் போது குறட்டை விடுகிறாள் அவளுக்கு எதாவது மருந்து கொடுங்கள் என்று மருத்துவரை அணுகியிருக்கிறார். குழந்தையை நேரில் பார்க்காமல் மருந்து கொடுக்க இயலாது. நேரில் அழைத்து வாருங்கள் என்று வரச்சொல்லி பரிசோதித்தால் மூக்கின் உட்புறத்தில் இயல்பான அளவை விட அதிகமாக சதை வளர்ந்திருக்கிறது. குழந்தைகளுக்கு அரிதாக வரக்கூடிய பிரச்சனையாகும். 

 

13 வயது குழந்தை பல நாட்களாக வாயில் தான் மூச்சு விட்டு இருந்திருக்கிறாள். யாருமே இதை கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள். பிறகு அறுவை சிகிச்சையின் மூலம் தான் இதை சரி செய்ய முடியும் என்றும், அதற்கு முன் மயக்கமருந்து கொடுப்பதற்கு நிபுணரை அணுகினர். மயக்க மருந்து நிபுணர்கள் பரிசோதித்து அறுவை சிகிச்சையின் போது வலி ஏற்படாமல் இருப்பதற்கும், இதய துடிப்பின் அளவினை பரிசோதித்தும் மயக்க மருந்து அளவு எடுத்து கொடுப்பார்கள். 

 

இந்த குழந்தைக்கு முழு மயக்க மருந்து தேவைப்பட்டது. குழந்தையை முழுமையான மயக்க நிலைக்கு கொண்டு போய் அறுவை சிகிச்சை செய்தனர், இரண்டு மூக்கு துவாரத்திலும் சதை வளர்ந்திருந்தது. அதை நீக்கி அறுவை சிகிச்சை செய்தனர். சில நாட்களுக்குப் பிறகு தன்னால் மூக்கின் வழியாக சுவாசிக்க முடிகிறது என்று மகிழ்ச்சியோடு அந்த குழந்தை சொன்னது.

 

சில சமயம் குறட்டைக்கு உடற்பருமன் காரணமாக சொல்லப்படும். ஆனால் சில குழந்தைகள் ஒல்லியாக இருப்பார்கள், அவர்களும் குறட்டை விடுவார்கள், தூங்கும் போது சுவாசிக்க உகந்தவாறு படுத்து இருக்க வேண்டும், அப்போது குறட்டையிலிருந்து விடுதலை அடையலாம். எல்லா விதமான குறட்டைக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு குறட்டையின் தன்மை தீவிரம் அடைந்த பிறகு மருத்துவரை அணுகும் போது நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை தேவையா அல்லது வெறும் மருந்து மாத்திரையால் குணப்படுத்தி விடலாமா என்பது பரிசீலிக்கப்படும். 

 

 


 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

குடல் இறக்கம் என்றால் என்ன? எப்படி சரி செய்வது? - பிரபல மருத்துவர் சந்திரசேகர் விளக்கம்

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

C

 

நோய்களை மருந்து கொண்டும் சரி செய்யலாம். சில நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்துதான் குணப்படுத்த முடியும். அந்த வகையில் குடல் இறக்கம் பற்றி பிரபல டாக்டர் சந்திரசேகர் சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறார்.

 

குடல் இறக்கம் என்பது குடல் இயல்பான இடத்திலிருந்து இறங்கி விரைவீக்கம் ஆகுமளவிற்கு ஆவதாகும். இது ஒரு வகை. மற்றொரு வகை அதிகப்படியாக எடை தூக்குவதால் வயிறு இறுகி குடல் இறக்கம் ஏற்படும். உடற்பயிற்சி நிலையங்களில் பலர் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் அதிக எடையை தூக்கினால் குடல் இறக்கம் ஏற்படும். குடலின் பலகீனமாக பகுதியில் எடை அதிகத் தன்மையால் குடல் வெளியில் வந்து விடும். அது ஒரு வகை குடல் இறக்கம் ஆகும். 

 

நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்தல், அதிகப்படியான பளு தூக்கி வேலை செய்தல், நின்று கொண்டே அதிகப்படியான அழுத்தம் தந்து வேலை செய்வது இவர்களுக்கெல்லாம் வயிற்றில் பிரசர் அதிகமாக போகும். இது வேலை சார்ந்த நோய்தான் என்பதையும் மனதில் கொள்க. 

 

குடல் இறக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்றால் ஆரம்ப நிலையில் முழு ஓய்வு எடுத்தாலே உடலே தன்னை தகவமைத்துக் கொள்ளும். ஆனால் ஓய்வு எடுக்கவே விரும்பாத பரபரப்பான உலகத்தில் குடல் இறக்கத்தை கவனிக்காமல் விட்டு சிலருக்கெல்லாம் குடல் இறங்கி முட்டி வரை வந்து அறுவை சிகிச்சை எல்லாம் செய்திருக்கிறோம். அந்த அளவுக்கு கவனிக்காமல் விட்டவர்களெல்லாம் உண்டு.

 

குடல் இறக்கம் வராமல் தடுப்பதற்கு அதிகப்படியான உடல் எடை தூக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அல்லது உங்கள் எடைக்கும் அதிகமான எடையை தூக்காமல் இருப்பதே நல்லது. பாடிபில்டிங், வெயிட் லிப்டிங் போன்று அதிகமான எடை தூக்கி பழகுகிறவர்கள் எடுத்த உடனேயே அவ்வளவு எடையை தூக்க மாட்டார்கள், கொஞ்சம் கொஞ்சமாக எடை தூக்குதலுக்கு உடலைப் பழக்கி அதன் பிறகு தூக்குவார்கள். எதுவாக இருந்தாலும் அளவோடு இருப்பது நல்லது. புரதம் சார்ந்த உணவு வகைகளை உணவில் எடுத்துக் கொள்வதால் குடல் இறக்கம் நடைபெறாது. புகைப்பழக்கத்தை, ஆல்கஹால் எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும்.  குடல் இறக்கம் நோயின் தன்மை அதிகமானால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை கட்டாயம் செய்தாக வேண்டும் என்றால் அதை தள்ளிப்போடக்கூடாது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்