Skip to main content

அதீத கோபம் பக்கவாதத்தை வர வைக்குமா? - விளக்குகிறார் டாக்டர் அருணாச்சலம்

 

Dr Arunachalam Health tips

 

மனித மூளை மற்றும் பக்கவாத நோய் குறித்த தகவல்களை நம்மோடு டாக்டர் அருணாச்சலம் பகிர்ந்துகொள்கிறார்.

 

விஞ்ஞானம் இன்னும் முழுமையாகக் கண்டறியாத ஒரு பாகம் என்றால் அது மூளை தான். இருதயம் குறித்த கண்டுபிடிப்புகள் தினம் தினம் அதிகரித்து வருகின்றன. மூளை குறித்த இயற்கையின் ரகசியம் மிகவும் நுட்பமானது. கம்ப்யூட்டரில் இருக்கும் விஷயங்கள் அத்தனையும் மூளையில் இருக்கிறது என்று சொல்லலாம். எனவே மூளை குறித்து ஓரளவு மட்டுமே நம்மால் அறிய முடிகிறது. கற்றது கையளவு என்று மருத்துவர்களே சொல்லக்கூடியது மூளை பற்றி தான். பல்வேறு செயல்பாடுகளால் நம்மை பிரம்மிக்க வைக்கிறது நம்முடைய மூளை. 

 

அதிகப்படியான ரத்தக் கொதிப்பு தான் பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம். அதீத கோபமும் பக்கவாதம் வர வைக்கும். மாரடைப்பும் பக்கவாதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ரத்தக்குழாய் வெடித்து ரத்தம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் தேங்கி, மற்ற இடங்களுக்குச் செல்லாமல் இருப்பதால் ஏற்படும் பக்கவாதமும் சிலருக்கு நேரும். எந்த வகையான பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிய சிடி ஸ்கேன் பயன்படுகிறது. வலி ஏற்படுவதால் பலர் பயப்படுகின்றனர். ஆனால் வலி ஏற்படுவது ஒரு வகையில் நல்லது. 

 

வலியே இல்லாமல் கை, காலைத் தூக்க முடியாமல், அசைக்க முடியாமல், உணர்வில்லாமல் போவது தான் ஆபத்தானது. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை இது. வயதுக்கு ஏற்றவாறு உடனடியாக எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்ப்பது தான் இதற்கான தீர்வு.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !