Skip to main content

ரூ. 2500 -க்கு வாங்கப்பட்டு 5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட கிண்ணம்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

chinese artifact bowl sold for huge price in auction

 

15 ஆம் நூற்றாண்டின் ஒரு அரிய சீன கலைப்பொருள், 35 டாலருக்கு நபர் ஒருவரால் வாங்கப்பட்டு சுமார் 7,00,000 டாலருக்கு அண்மையில் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இங்கிலாந்தின் கனெக்டிக்கட் (Connecticut) பகுதியில் இருந்து நபர் ஒருவரால் 35 டாலருக்கு வாங்கப்பட்ட ஒரு மலர் பீங்கான் கிண்ணம், சோத்பேயின் (Sotheby) ஏலத்தில் 7,00,000 டாலருக்கு விற்கப்பட்டது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சோத்பே (Sotheby) நிறுவனத்தின் சீன கலைப்பொருள் நிபுணர்கள் இந்த கிண்ணத்தை ஆய்வு செய்த போது, சீனாவில் ஆட்சி செய்த 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிங் வம்சத்துக்குச் சொந்தமான கிண்ணம் என்பதைக் கண்டுபிடித்தனர். உலகிலேயே  இது போன்ற கிண்ணங்கள் இதுவரை 6 மட்டுமே உள்ளதாக அறியப்படுகிறது. அவற்றில் தைவானில் உள்ள தைப்பேயில் தேசிய அருங்காட்சியகத்தில் இரண்டு கிண்ணங்கள், லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இரண்டு கிண்ணங்கள் மற்றும் ஈரானின் தேசிய அருங்காட்சியகத்தில் மற்றொன்று உள்ளது.

 

தாமரை மொட்டு போல வடிவமைக்கப்பட்டு நீல நிற கோபால்ட் கொண்டு வரையப்பட்ட இந்த கிண்ணத்தை 3,00,000 முதல் 5,00,000 டாலர் வரை மதிப்புள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டனர். ஆனால், கடந்த மார்ச் 17 அன்று நியூயார்க்கில் நடந்த சோத்பேயின் (Sotheby) முக்கியமான சீன கலை ஏலத்தில் நான்கு ஏலதாரர்களுக்கு இடையிலான போட்டிக்குப் பின்னர், கிண்ணம் 7,21,800 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. இது ஏலத்தின் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட விலையை விட 20,000 மடங்கு அதிகமாகும். மிகவும் விலை உயர்ந்த கலைப் பொருட்களுள் ஒன்றாகக் கருதப்படும் இந்த கிண்ணம் 16 சென்டி மீட்டர் விட்டத்துடன் உள்ளது.

 

"இந்த கிண்ணம் 1403 முதல் 1424 வரை ஆட்சி செய்த யோங்கிள் பேரரசர் என அழைக்கப்படும் மிங் வம்சத்தின் மூன்றாவது பேரரசரின் ஆட்சிக்கு முந்தையது. இது யோங்கிள் அரசின் நீதிமன்றத்திற்காகச் செய்யப்பட்ட கிண்ணம் என நம்பப்படுகிறது. இது ஜிங்டெஷன் நகரில் உள்ள பீங்கான் சூளையில் யோங்கிள் நீதிமன்றத்திற்காக புதிய பாணியில் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மிகச்சிறந்த யோங்கிள் தயாரிப்பாகும். அந்த காலத்தின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அதன் வண்ணம் மற்றும் வடிவமைப்புகள் இருந்துள்ளன. அந்த கிண்ணம் தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருந்தது. அவர்கள் ஆட்சி செய்த காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கிண்ணங்களின் பொற்காலம்" என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

இதுகுறித்து சோதேபியின் மூத்த துணைத் தலைவரும் சீன கலைத் துறையின் தலைவருமான மெக்டீர் கூறும்போது, "நாங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பொருளைப் பார்க்கிறோம். ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த கிண்ணத்தில் நம்பமுடியாத கதை உள்ளது" என்றார். மேலும் அவர் ஒரு அறிக்கையில், "கிண்ணத்தை முதன் முறையாகப் பார்த்தவுடன், எங்கள் குழு இந்த மறுக்க முடியாத ரத்தினத்தின் தரத்தை உடனடியாக அங்கீகரித்தது. இது விலைமதிப்பற்ற கலைப் பொருட்களுள் ஒன்றாகக் கருதப்படும்" என்றார். மேலும் அவர், மிகவும் அரியவகை கலைப்பொருட்களில் ஒன்றான இந்த கிண்ணம் கிடைத்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

 

 

 

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.