கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

01.09.2018 ஆவணி 16, சனிக்கிழமை, சஷ்டி திதி இரவு 09.44 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பரணி நட்சத்திரம் இரவு 09.02 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சஷ்டி. முருக வழிபாடு நல்லது.

Advertisment

இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

Advertisment

meshamமேஷம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வருமானம் பெருகும்.

reshabamரிஷபம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதமாகும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

Advertisment

3மிதுனம்

இன்று இல்லத்தில் இனிய செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

|

kadagamகடகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.

5சிம்மம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் அலட்சியத்தால் வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். எதிலும் நிதானம் தேவை.

.

kannirasiகன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் கவனம் தேவை.

thulamதுலாம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமைக்கேற்ப பதவி உயர்வு கிட்டும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் உண்டாகும்.

viruchagamவிருச்சிகம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.

danushதனுசு

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

magaramமகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை விஷயமாக அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உணடாகும். பொருளாதார பிரச்சனை ஓரளவு குறையும்.

kumbamகும்பம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். செய்யும் செயல்களை முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுடன் நல்ல நட்புறவு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

meenamமீனம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையில்லாத இடமாற்றத்தால் மன நிம்மதி கெடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். கடன்கள் குறையும்.