Skip to main content

இன்றைய ராசி பலன் -26.05.2023

Published on 25/05/2023 | Edited on 26/05/2023

 

today rasipalan -  29.03.2023

 

இன்றைய  பஞ்சாங்கம்

26-05-2023, வைகாசி 12, வெள்ளிக்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை சப்தமி திதி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 08.50 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நவகிரக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

 

இன்றைய ராசிபலன் -  26.05.2023

 

mesham

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

reshabam

ரிஷபம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும்.

3

 

மிதுனம் 

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன் சுமை குறையும்.

kadagam

கடகம்

இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.

5

சிம்மம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். ஊழியர்களின் ஒத்துழைப்பால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறையை சமாளிக்க முடியும்.

 

kannirasi

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

thulam

துலாம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களால் மனமகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய நவீன பொருட்கள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும்.

viruchagam

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

 

danush

தனுசு

இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

 

magaram

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மன அமைதி ஏற்படும்.

kumbam

கும்பம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மந்த நிலை நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும்.

 

meenam

மீனம்

இன்று தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் வேலைபளு சற்று அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த உதவி தடையின்றி கிடைக்கும்.

 

 

 

 

Next Story

இன்றைய ராசி பலன்-18.06.2024

Published on 17/06/2024 | Edited on 18/06/2024

 

Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

18-06-2024, ஆனி 04, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி காலை 06.28 வரை பின்பு வளர்பிறை துவாதசி. சுவாதி நட்சத்திரம் பகல் 03.56 வரை பின்பு விசாகம். சித்தயோகம் பகல் 03.56 வரை பின்பு மரணயோகம். ஏகாதசி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். பெருமாள் வழிபாடு நல்லது. 

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசி பலன் - 18.06.2024

mesham

மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
 

reshabam

ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

3

மிதுனம் 

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.



kadagam

கடகம்

இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.
.

5

சிம்மம்

இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

kannirasi

கன்னி

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். பண பற்றாக்குறையால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
 

thulam

துலாம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர சகோதரி வழியில் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பாராத பணவரவால் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
 

viruchagam

விருச்சிகம்

இன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர்.
 

danush

தனுசு

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.



magaram

மகரம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

kumbam

கும்பம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். சிக்கனமாக செயல்பட்டால் செலவுகளை சமாளிக்க முடியும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு தீரும்.

meenam

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நன்று.

 

Next Story

இன்றைய ராசி பலன்-17.06.2024

Published on 16/06/2024 | Edited on 17/06/2024
Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

17-06-2024, ஆனி 03, திங்கட்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை ஏகாதசி திதி. சித்திரை நட்சத்திரம் பகல் 01.50 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்ட யோகம் பகல் 01.50 வரை பின்பு அமிர்தயோகம்.  

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

இன்றைய ராசி பலன் - 17.06.2024

mesham

மேஷம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பண பிரச்சினைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
 

reshabam

ரிஷபம்

இன்று குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும்.




3

மிதுனம் 

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். சுப காரியங்கள் கைகூடும்.



kadagam

கடகம்

இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.
.

5

சிம்மம்

இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியான பிரச்சினைகளில் சாதகமான பலன் கிட்டும்.

kannirasi

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும்.
 

thulam

துலாம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
 

viruchagam

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமத நிலை ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
 

danush

தனுசு

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய பொருள் வாங்குவீர்கள்.


magaram

மகரம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
 

kumbam

கும்பம்

.இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் சாதகமான பலன் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.
 

meenam

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. சுபகாரியங்களை தவிர்க்கவும்.