Skip to main content

தினசரி ராசிபலன்- 11.04.2021

Published on 10/04/2021 | Edited on 11/04/2021

மிதுனம்
இன்று உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

kadagam

கடகம்
இன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

5

சிம்மம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

kannirasi

கன்னி
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

thulam

துலாம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

viruchagam

விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். எந்த விஷயத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது.

danush

தனுசு
இன்று நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

magaram

மகரம்
இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

kumbam

கும்பம்
இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

meenam

மீனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.
 

Next Story

இன்றைய ராசி பலன் -28.03.2024

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

Today rasi palan - 19.02.2024

இன்றைய  பஞ்சாங்கம்

28.03.2024, பங்குனி - 15, வியாழக்கிழமை, திரிதியை திதி மாலை 06.57 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி, சுவாதி நட்சத்திரம் மாலை 06.38 வரை பின்பு விசாகம், அமிர்தயோகம் மாலை 06.38 வரை பின்பு சித்தயோகம், சங்கடஹர சதுர்த்தி விரதம், லட்சுமி நரசிம்மர் வழிபாடு நல்லது, கரிநாள், புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

இன்றைய ராசி பலன் - 28-03-2024

mesham

மேஷம்

.இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
 

reshabam

ரிஷபம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.



3

மிதுனம் 

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை ஓரளவு நீங்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.



kadagam

கடகம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வேலையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நன்மை தரும்.

5

சிம்மம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.


 

kannirasi

கன்னி


இன்று உத்தியோகத்தில் பணிசுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
 

thulam

துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். கூட்டாளிகள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
 

danush

தனுசு

இன்று உங்களுக்கு எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கடிகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சியில் உற்றார் உறவினர்களால் நற்பலன்கள் கிட்டும்.



magaram

மகரம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.

meenam

மீனம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.

Next Story

இன்றைய ராசி பலன் -27.03.2024

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Today rasi palan - 19.02.2024

இன்றைய  பஞ்சாங்கம்

27.03.2024, பங்குனி - 14, புதன்கிழமை, துதியை திதி மாலை 05.07 வரை பின்பு தேய்பிறை திரிதியை, சித்திரை நட்சத்திரம் மாலை 04.15 வரை பின்பு சுவாதி, நாள் முழுவதும் சித்த யோகம், சுபமுகூர்த்த நாள் சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 

இன்றைய ராசி பலன் - 27-03-2024

mesham

மேஷம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.
 

reshabam

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.


3

மிதுனம் 

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். கடன்கள் குறையும்.


kadagam

கடகம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
 

5

சிம்மம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வகையில் சுபசெய்திகள் வந்து சேரும்.

kannirasi

கன்னி

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

thulam

துலாம்

இன்று உடன்பிறப்புகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும்.
 

viruchagam

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
 

danush

தனுசு

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.


magaram

மகரம்

இன்று உள்ளம் மகிழும் இனிய செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும்.

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க சிக்கனமாக இருப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சினை சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள்.

meenam

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவை இல்லாத வீண் செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.