Skip to main content

இன்றைய ராசி பலன் - 09.12.2023

Published on 09/12/2023 | Edited on 10/12/2023
Today rasipalan -07.09.2023

இன்றைய  பஞ்சாங்கம்

07-12-2023, கார்த்திகை 21, வியாழக்கிழமை, தசமி திதி பின்இரவு 05.06 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திரம் நட்சத்திரம் காலை 06.28 வரை பின்பு அஸ்தம். மரணயோகம் காலை 06.28 வரை பின்பு சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

இன்றைய ராசிபலன் -  09-12-2023

 

mesham

மேஷம்

இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். எதிர்பாராத பணவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

reshabam

ரிஷபம்

இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.


3

மிதுனம் 

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. தேவைகள் பூர்த்தியாகும்.

kadagam

கடகம்

இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

5

சிம்மம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
 

kannirasi

கன்னி

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியிலிருந்து வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.
 

thulam

துலாம்

இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
 

viruchagam

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.
 

danush

தனுசு

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.



magaram

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.


kumbam

கும்பம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

 

meenam

மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்ப்பது உத்தமம்.

Next Story

இன்றைய ராசி பலன் - 05.03.2024

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Today rasi palan - 19.02.2024

இன்றைய  பஞ்சாங்கம்

05.03.2024, மாசி - 22, செவ்வாய்கிழமை, நவமி திதி காலை 08.04 வரை பின்பு தேய்பிறை தசமி, மூலம் நட்சத்திரம் பகல் 03.59 வரை பின்பு பூராடம், அமிர்தயோகம் பகல் 03.59 வரை பின்பு சித்தயோகம், முருக வழிபாடு நல்லது, வாஸ்து நாள் காலை 10.30 மணி முதல் 11.06 மணிக்குள்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசி பலன் - 05-03-2024

mesham

மேஷம்

இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். சிக்கனமுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் லாபம் கிட்டும்.

reshabam

ரிஷபம்


இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும்.

.


3

மிதுனம் 

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

.


kadagam

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.
 

5

சிம்மம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.

kannirasi

கன்னி

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
 

thulam

துலாம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பாராத இனிய நிகழ்வுகள் மகிழ்ச்சியை அளிக்கும்.
 

viruchagam

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உடல்நிலை சற்ற மந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.
 

danush

தனுசு

இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
 


magaram

மகரம்


இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம்.  ஆரோக்கிய ரீதியாகவும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.



kumbam

கும்பம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். கடன் பிரச்சினை குறையும்.
 

meenam

மீனம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

Next Story

இன்றைய ராசி பலன் - 04.03.2024

Published on 04/03/2024 | Edited on 04/03/2024

 

Today rasi palan - 19.02.2024

இன்றைய  பஞ்சாங்கம்

04.03.2024, மாசி - 21, திங்கட்கிழமை, அஷ்டமி திதி காலை 08.49 வரை பின்பு தேய்பிறை நவமி, கேட்டை நட்சத்திரம் மாலை 04.21 வரை பின்பு மூலம், நாள் முழுவதும் சித்தயோகம், புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

இன்றைய ராசி பலன் - 04-03-2024

mesham

மேஷம்

இன்று மாலை 04.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் தக்கநேரத்தில் கிடைக்கும் என்றாலும் நிதானமாக இருப்பது நல்லது. வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாலை நேரத்தில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
 

reshabam

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.21 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
.


3

மிதுனம் 

இன்று நீங்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
.


kadagam

கடகம்

இன்று உங்கள் பொருளாதார நிலையும், ஆரோக்கியமும் சற்று மந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிட்டும்.
 

5

சிம்மம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பயணம் உண்டாகும். உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

kannirasi

கன்னி

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

thulam

துலாம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். சுபமுயற்சிகளில் நற்செய்தி கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகமாக இருக்கும். எதிலும் கவனம் தேவை.
 

viruchagam

விருச்சிகம்

இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகத்தில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.
 

danush

தனுசு

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.


magaram

மகரம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.



kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமைக்கேற்ற உயர்வு கிட்டும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

meenam

மீனம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.