Skip to main content

இன்றைய ராசிப்பலன் - 07.03.2019

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

07-03-2019, மாசி 23, வியாழக்கிழமை, பிரதமை  திதி இரவு 11.44 வரை பின்பு வளர்பிறை துதியை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 08.53 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

mesham

மேஷம்

இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.

reshabam

ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற உயர்வு கிட்டும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

3

மிதுனம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பாராத உதவி கிட்டும்.

 

kadagam

கடகம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு பகல் 02.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை

5

சிம்மம்

 

இன்று பகல் 02.15 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வேலையில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

kannirasi

கன்னி

இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

 

thulam

துலாம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

 

viruchagam

விருச்சிகம்

இன்று நீங்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

 

danush

தனுசு

 

இன்று உங்களுக்கு பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி இருக்கும்

magaram

மகரம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

kumbam

கும்பம்

 

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

meenam

மீனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பயணம் உண்டாகும். உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.