Skip to main content

தினசரி ராசிபலன் - 02.07.2020

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

02-07-2020, ஆனி 18, வியாழக்கிழமை, துவாதசி திதி பகல் 03.17 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 01.13 வரை பின்பு கேட்டை. சித்த யோகம் பின்இரவு 01.13 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

தினசரி ராசிபலன் - 02.07.2020

mesham

மேஷம்
இன்று எந்த ஒரு செயலிலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.


reshabam

ரிஷபம்
இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். புத்திர வழியில் அனுகூலம் ஏற்படும். பொன் பொருள் சேரும். பழைய கடன்கள் குறையும். அமைதி நிலவும்.


3

மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். பணப்பிரச்சினைகள் குறையும்.


kadagam

கடகம்
இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மன அமைதி குறையும். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலனை அடையலாம். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.


5

சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.


kannirasi

கன்னி
இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


thulam

துலாம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத விரயங்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.


viruchagam

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவி இன்று உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் நெருக்கடிகள் குறைந்து லாபங்கள் அதிகரிக்கும்.


danush

தனுசு
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.


magaram

மகரம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். பணவரவு தாரளமாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும்.


kumbam

கும்பம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். சொத்து சம்மந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு ஏற்படும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.


meenam

மீனம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் வருமானம் பெருகும்.

 

 

Next Story

இன்றைய ராசிபலன் - 24.04.2024

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Today rasi palan - 16.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

24-04-2024, சித்திரை 11, புதன்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை பிரதமை திதி. சுவாதி நட்சத்திரம் இரவு 12.41 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். 

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 

இன்றைய ராசி பலன் - 24.04.2024

mesham

மேஷம்

இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். குடும்பத்தினர் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

reshabam

ரிஷபம்

இன்று உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சாதகமான பலனை அடைவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

3

மிதுனம் 

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். நெருங்கியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.


kadagam

கடகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும்.
 

5

சிம்மம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.
 

kannirasi

கன்னி

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உடனிருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காண முடியும். எதிலும் பொறுமை தேவை.
 

thulam

துலாம்

இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளி பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

viruchagam

விருச்சிகம்

இன்று தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப நற்பலன்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
 

danush

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.


magaram

மகரம்

இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
 

kumbam

கும்பம்

இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் சற்று கவனம் தேவை. உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுத்த கடன் வசூலாகும்.

meenam

மீனம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Next Story

இன்றைய ராசி பலன் -23.04.2024

Published on 22/04/2024 | Edited on 23/04/2024

 

Today rasi palan - 16.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

23-04-2024, சித்திரை 10, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 05.19 வரை பின்பு தேய்பிறை பிரதமை. சித்திரை நட்சத்திரம் இரவு 10.32 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். சித்ரா பௌர்நமி விரதம். சித்ரகுப்த பூஜை. வாஸ்து நாள் காலை 8.50-9.26. 

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசி பலன் - 23.04.2024

mesham

மேஷம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.
 

reshabam

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

3

மிதுனம் 

இன்று உங்களுக்கு சுபவிரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வகையில் வம்பு வழக்குகள் உண்டாகும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

kadagam

கடகம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் சில இடையூறுகள் உண்டாகலாம். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும்.
 

5

சிம்மம்

இன்று உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
 

kannirasi

கன்னி

இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். எதிலும் கவனத்துடனும், சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். கடன் பிரச்சினை ஓரளவு தீரும்.
 

thulam

துலாம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க சில இடையூறுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிடைக்கும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.
 

danush

தனுசு

இன்று உறவினர்கள் வழியில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சேமிப்பு உயரும்.


magaram

மகரம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் வசூலாகும். உறவினர்களால் அனுகூல-ம் கிட்டும்.
 

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக உடல் அசதி மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உங்கள் ராசிக்கு காலை 09.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானம் தேவை. உங்களுக்கு மதியத்திற்கு பிறகு அனுகூலமான செய்தி கிடைக்கும். மன நிம்மதி ஏற்படும்.

meenam

மீனம்

இன்று உங்களுக்கு மனஉளைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு காலை 09.18 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம்.