Skip to main content

"தாலிக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியம் இருக்கா" - பாடகரும் ஜோதிட ஆர்வலருமான பிரசன்னா பகிரும் சுவாரசியம்

 

Singer Prasanna spoke about ALP Astrology 

 

ஏஎல்பி ஜோதிடத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பாடகர் பிரசன்னா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

என்னுடைய தாத்தா ஒரு பெரிய ஜோதிடர். பாம்பு கடிக்கு வெல்லத்தால் ஜெபம் செய்து குணமான நிகழ்வுகளும் அந்தக் காலத்தில் எங்கள் குடும்பப் பாரம்பரியத்தில் உண்டு. அதனால் எனக்கும் இயல்பாகவே இதில் ஆர்வம் இருந்தது. சரியான ஒரு குருவை நான் தேடிக்கொண்டிருந்த போது தான் பொதுவுடைமூர்த்தி சார் பற்றி தெரிந்தது. லக்கின மாற்றம் குறித்து அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஏஎல்பி ஜோதிட முறையில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு சில வினாடிகளுக்குள் பதிலளிக்கின்றனர்.

 

ஏஎல்பி லக்கினத்தின் அடிப்படையில் பார்க்கப்படும் ஜோதிடம் துல்லியமாக இருக்கிறது. மனைவியை இழந்த இளம் வயது ஆண் ஒருவர் தனக்கு இரண்டாவது திருமணம் எப்போது, எப்படி நடக்கும் என்று நம்மிடம் கேட்டபோது, அவருக்கு மாற்று சாதி அல்லது மாற்று மதத்தில் திருமணம் நடக்கும் என்று கூறினேன். அதைப்போலவே நடந்தது. பொதுவுடைமூர்த்தி சாருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர் போன்ற ஒரு குரு அனைவருக்கும் கிடைப்பதில்லை. 

 

இந்த ஜோதிடத்தைக் கற்றுக்கொண்ட 15-வது நாள் என்னால் ஜோதிடம் சொல்ல முடிந்தது. மூர்த்தி சார் போன்ற கற்றுத் தேர்ந்தவர்களிடம் 50 ஜாதகங்களைக் கொடுத்தாலும் சில நொடிகளில் அவற்றை கணித்து விடுவர். இந்தக் கலை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கிறது. இதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் தாலி செய்யும்போதே அந்தத் திருமணம் எவ்வளவு காலம் நிலைக்கும் என்பதை ஆசாரிகள் கணித்தனர் என்கிற தகவல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

 

இந்த ஏஎல்பி ஜோதிடத்துக்கான ஆசிரியர்கள் மிகுந்த பொறுமைசாலிகள். ஒவ்வொன்றாக நமக்கு சரியான முறையில் கற்றுத் தருவார்கள். என்னுடைய குடும்பம் ஒரு இசைக் குடும்பம். சிறுவயதிலிருந்தே இசை கற்றுக்கொண்டு பாட ஆரம்பித்தேன். சினிமாவில் 1200-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளேன். தற்போது இசையமைப்பாளராகவும் களம் கண்டுள்ளேன். செய்யும் வேலையை நாம் ரசித்து செய்தால் நம்முடைய வேலையை மக்களும் ரசிப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். இசையிலும் சிறந்த குருக்கள் எனக்கு அமைந்தது வரம்.

 

அந்தக் காலத்தில் பலருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்போது திறமையை நிரூபிக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !