Skip to main content

திருமணம் செய்துகொண்டவர்கள் திங்கட்கிழமைதோறும் விரதம் ஏன் ?

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

சிவ. சேதுபாண்டியன்

சனி பகவானைக் கொண்டே நம் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் கணக்கிடப்படுகின்றன. உதாரணமாக சனி, செவ்வாய் இணைந்தாலும், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் ஊழ்வினை தோஷமாகும். அதேபோல குரு, சனி இணைந்தாலோ, பார்வை பெற்றாலோ, ஒருவருக்கொருவர் பரி வர்த்தனை பெற்றாலோ பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். இதற்கும் சனி பகவானே முக்கிய காரண மாகிறார். நமது ஜாதகத்தை நன்றாக ஆராயும்பொழுது கண்ணுக் குத் தெரியாத ரகசியங்கள் வெளிவரும். அவற்றில் ஒன்றுதான் புனர்பூ தோஷம். இதுவும் சனி பகவானால் உண்டாகக்கூடியது. இந்த தோஷம் இருந்தால் திருமணம் நடக்காது. அப்படியே நடந்தாலும் பின்னர் மணமக்கள் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிடும் நிலை உருவாகும்.

temple

புனர்பூ தோஷம் என்பது-

● சனியும், சந்திரனும் ஒரே வீட்டில் இணைந்திருப்பது.

● சனி வீட்டில் சந்திரனும், சந்திரன் வீட்டில் சனியும் இருப்பது.

● சனி நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது.

● இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்வது.

ஜாதகங்களைப் பொருத்தம் பார்க்கும் பொழுது புனர்பூ தோஷமிருந்தால் ஒதுக்கிவைக்க வேண்டும்.
 

temple 1

கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படாமலிருப்பதற்கு புனர்பூ தோஷமே காரணமாகிறது. யோனிப் பொருத்தம் இருந்தாலும் புனர்பூ தோஷமிருந்தால் கணவன்- மனைவிக்குள் முதலில் ஒற்றுமையாக இருந்தாலும் ஒரு குழந்தை பிறந்தபிறகு வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டுவிடும். ஒருசிலர் வேறுவழியில்லாமல் கணவன் செய்யும் தவறுகளை மனைவியும், மனைவி செய்யும் தவறுகளை கணவனும் பொறுத்துக்கொண்டு வெளியில் சொல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இது ஒரு ரகம். சிலர் ரகசியமாக வாழத்தெரியாமல் ஊரைக் கூட்டிவிடுவார்கள். பின்பு நீதிமன்றம் போய் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிடுவார்கள். எனவே, பொருத்தம் பார்க்கும்பொழுது செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் இருக்கிறதா என பார்க்கும்பொழுது, புனர்பூ தோஷமும் இருக்கிறதா என்பதை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

பரிகாரம்

புனர்பூ தோஷத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள் திங்கட்கிழமைதோறும் விரதமிருந்து, ஒன்பதாவது திங்கட்கிழமை திருச்செந்தூர் முருகன் அல்லது உங்கள் பகுதியிலுள்ள வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபட்டு வர தோஷம் நீங்கும். ஒன்பது வாரத்திற்குக் குறையாமல் விரதமிருப்பது அவசியம்.