Skip to main content

பிரபல ஹாலிவுட் படத்தில் ஜான் சீனா!

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் ஒன்று WWE குத்துசண்டை போட்டிதான். இந்த குத்து சண்டை போட்டி உலகம் முழுவதும் சிறுவர்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் போட்டியாக உள்ளது.இதில் வரும் வீரர்களுக்கு நிறைய ரசிகர் பட்டாளம் உண்டு.அதிலும் குறிப்பாக ராக்,அண்டர்டேக்கர்,ட்ரிபிள் ஹச்,ஜான் சீனா,கிரேட் காளி,பிக் ஷோ இவர்களுக்கு அதிகமாக ரசிகர்கள் உள்ளனர்.   
 

johncena



இதில் ராக் நிறைய ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜான் சேனா WWE போட்டி மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பல திரைப்படங்களிலும் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். தற்சமயம் அவர் WWE போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 சீரியஸின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் ராக் எனப்படும் டுவைன் ஜான்சன் ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் அனைத்து பாகங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

 

இதை படிக்காம போயிடாதீங்க !