Skip to main content

உலகளவில் கரோனா பலி 21 ஆயிரத்தைத் தாண்டியது!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,198 ஆக அதிகரித்துள்ளது. 198 நாடுகளுக்குப் பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,807 ஆனது. அதேபோல் உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,14,218 பேர் குணமடைந்துள்ளனர்.

world wide coronavirus increased

இத்தாலியில் கரோனாவால் ஒரே நாளில் 683 பேர் இறந்ததால் உயிரிழப்பு 7,503 ஆக அதிகரித்துள்ளது. இந்த நாட்டில் புதிதாக 5,210 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 74,386 ஆக உயர்ந்துள்ளது.


அமெரிக்காவில் கரோனாவால் ஒரே நாளில் 162 பேர் இறந்ததால் உயிரிழப்பு 942 ஆக அதிகரித்துள்ளது. இந்த நாட்டில் புதிதாக 10,941 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு 65,797 ஆக உயர்ந்துள்ளது. 

ஸ்பெயினில் கரோனாவால் புதிதாக 656 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,647 ஆக அதிகரித்தது. இந்த நாட்டில் புதிதாக 7,457 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 49,515 ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவில் கரோனாவால் 81,285 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு 3,287 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஈரானில் 2,077,  பிரான்சில் 1,331, ஜெர்மனியில் 206, பாகிஸ்தானில் 8 பேர் உயிரிழந்தனர். 

இந்தியாவில் கரோனாவால் 606 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு 10 ஆக அதிகரித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்