உலகைஅச்சுறுத்திவரும் கரோனாவைரஸ், தற்போது மரபணுமாற்றமடைந்து, புதிய வகை கரோனவாக மாறியுள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இந்தப்புதிய வகை கரோனாவேகமாகப் பரவி வருகிறது.
இதன்காரணமாக, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து விமானங்கள் வர ஏற்கனவே இந்தியா, கனடா, சௌதிஅரேபியாஉள்ளிட்ட நாடுகள் தடைவிதித்துள்ளன.
இந்தநிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவிலிருந்தும் விமானங்கள் வர ஜெர்மனி, இஸ்ரேல், துருக்கி, சௌதி அரேபியா, ஸ்விச்சர்லாந்து ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.