Skip to main content

79 முறை பயன்படுத்தப்பட்ட அந்த ஒரு வார்த்தை... பைடனுக்கு ட்ரம்ப் எழுதிய கடிதம்.... சுவாரசியமூட்டும் அதிபர் பதவியேற்பு!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

That word used 79 times ... Trump's letter to Biden .... Impressive Chancellor Inauguration!

 

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் நேற்று பதவி ஏற்றார். 78 வயதாகும் ஜோபைடன் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபர் என்னும் பெருமைக்குரியவர். அதேபோல் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் துணை அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டார். முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோரும் இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

 

That word used 79 times ... Trump's letter to Biden .... Impressive Chancellor Inauguration!

 

306 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்று அதிபர் மாளிகையில் அடியெடுத்து வைத்த ஜோ பைடனுக்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்துவைத்தார். அதேபோல், கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராகப் பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அதிலும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

பதவியேற்பு விழாவில் பேசிய ஜோ பைடன், "இது அமெரிக்காவின் நாள். இது ஜனநாயகத்தின் நாள். அமெரிக்க அதிபரின் பணியை நான் உண்மையாக நிறைவேற்றுவேன். அரசமைப்பை பாதுகாக்க என்னால் முடிந்தவரை சிறப்பாகச் செயல்படுவேன். ஒற்றுமையுடன் இருந்தால் எந்தக் காலத்திலும் நாம் தோற்கமாட்டோம். ஒற்றுமை இல்லாமல் அமைதி நிலைக்காது. ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கும் நான் அதிபராக இருப்பேன்" என நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் உறுதிமொழி எடுத்து பொறுப்பேற்றுக் கொண்டார். 

 

இந்நிலையில், ஜோ பைடனின்  பதவியேற்பு விழாவில் நிகழ்ந்த சில சுவாரசிய சம்பவங்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஜோ பைடனின் உரை இருந்தது. அதில், நாங்கள் (We) எனும் ஆங்கில வார்த்தையை 79 முறை பயன்படுத்தினார் பைடன். அதைவிட மிகுந்த சுவாரசியம் ஜோ பைடனின் உரையைத் தயாரித்தவர் ஒரு இந்தியர். தெலுங்கானாவைச் சேர்ந்த வினை ரெட்டி என்பவரே ஜோ பைடனின் தொடக்க உரையைத் தயாரித்தவர்.

 

That word used 79 times ... Trump's letter to Biden .... Impressive Chancellor Inauguration!

 

அதேபோல், பதவியேற்றபின் வெள்ளை மாளிகைக்குச் சென்ற ஜோ பைடனுக்கு டிரம்ப் விட்டுச் சென்ற கடிதம் மேலும் சுவையைக் கூட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பதவிக்காலம் முடிந்துசெல்லும் அதிபர் அப்பதவியின் தனித்துவம் குறித்து வரப்போகும் அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதிவைக்க வேண்டும் என்பது மரபு. ட்ரம்ப் எழுதிய கடிதம் ஓவல் அலுவலகத்திலிருந்து ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தது என பைடன் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

 

2017 ஆம் ஆண்டு டிரம்புக்கு ஒபாமா எழுதிய கடிதத்தில் ''இது ஒரு தனித்துவமான அலுவலகம்'' எனக் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் ஒபாமாவுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் எழுதிய கடிதத்தில் ''உங்கள் வாழ்வின் மிகச் சிறந்த பகுதி இன்று தொடங்கி இருக்கிறது'' எனத் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில் ஜோ பைடனுக்கு கடிதத்தின் மூலமாக டிரம்ப் என்ன தெரிவித்திருப்பார் என்பது ஆர்வத்தைக் கூட்டி இருக்கிறது என்றே சொல்லலாம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Next Story

“உலகப்போர் ஏற்படும் அபாயம் இருக்கிறது” - டிரம்ப் எச்சரிக்கை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Trump warns There is a risk of world war

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் மீது கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர்ச்சூழல் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை சமாளிப்பதற்கு இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trump warns There is a risk of world war

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “இஸ்ரேல் - ஈரான் மோதல் விவகாரத்தில் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம். அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்பாக அதுவும் குறிப்பாக தற்போது உள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.