உலகம் முழுவதும் கரோனாவால் கடும் அச்சுறுத்தலைச் சந்தித்து வரும் நிலையில், பெண் ஒருவர் தனக்குத் திருமணம் நிச்சயமானதைத் தனிமைப்படுத்தப்பட்ட தனது தாத்தாவிடம் கண்ணாடிக் கதவு வழியே சொல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வரலாகி வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் இதுவரை 10,000 கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதேபோல பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2,44,979 ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரசால் அதிகபட்சமாக இத்தாலியில் 3,405 பேரும், சீனாவில் 3,245 பேரும், ஈரானில் 1,284 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் திருமண நிச்சயமான பெண் ஒருவர் தனது தனிமைப்படுத்தப்பட்ட தாத்தாவிடம் கண்ணாடி வழியாகத் தனது நிச்சய மோதிரத்தைக் காட்டும் புகைப்படம் இணையத்தில் பலரையும் கலங்க வைத்துள்ளது.
22 வயதான கார்லி என்ற அந்தப் பெண் இதுகுறித்து கூறுகையில், "என் தாத்தாவிற்கு டிமென்ஷியா இருப்பதால், அவரிடம் செல்போன் இல்லை. ஆனால் எனது நிச்சயம் குறித்து அவரிடம் சொல்ல விரும்பினேன். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். அவரைச் சந்தித்த போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன். துக்கம் தாளாமல் நான் ஜன்னலில் என் கையை வைத்து "உங்களை மிகவும் நேசிக்கிறேன்" என்றேன். அவரும் தனது கைகளை என் கைகளின் அருகில் வைத்து "நானும் உன்னை நேசிக்கிறேன்" என்றார். விரைவில் அவரை மீண்டும் நலமுடன் பார்ப்பேன் என் நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.