சீனாவில் ரயிலில் பயணித்த ஒரு பெண் அங்கு நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துள்ளார். இவரது சிரிப்பை இவரால் சில நிமிடங்களுக்கு அடக்க முடியவில்லை. சில நிமிடங்களுக்குப் பின்பு தான் தெரிந்தது. இவரால் சிரிப்பை இனி அடக்கவே முடியாது என்று. அவர் சிரிக்கும் போது அவரது தாடைப்பகுதி பகுதி நகன்று அவரது வாய் மூட முடியாமலேயே போய்விட்டது. இதனால் அவர் வாயை மூட முடியாமல் மிகவும் திணறினார். இதை அதே ரயிலில் பயணித்த டாக்டர் இவருக்கு ஒருவேளை அதிகம் சிரித்ததால் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்குமோ என நினைத்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
உடனடியாக அவரது ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார். அப்பொழுது அவருக்கு ரத்த அழுத்தம் சீராக இருந்ததையடுத்து இவருக்கு வேறு பிரச்னை என உணர்ந்து அவரின் தாடை நகர்ந்திருப்பதைக் கண்டுபிடித்தார். பின்னர் அவர் அதைச் சிகிச்சை மூலம் சரி செய்தார். அடக்க முடியாமல் வாய்விட்டுச் சிரித்த பெண்ணிற்கு வாய் அப்படியே நின்று போன புகைப்படம் சமூகவலைத்தளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது.