
விழுப்புரத்தில் மது போதையில் தகராறு செய்த கணவனின்முகத்தில் மனைவி கொதிக்கக் கொதிக்க ரசத்தை ஊற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்ற நபர் தினமும் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல் வீட்டிலும் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே மனைவி குப்பம்மாள் போலீசாரிடம் இரண்டுமுறை புகாரளித்துள்ளார். போலீசாரும் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் மதுபோதையில் நடராஜன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது ஆத்திரம் தாங்க முடியாத மனைவி குப்பம்மாள் சுடச் சுட கொதிக்கும் ரசத்தை கணவன் நடராஜின் முகத்தில் ஊற்றியுள்ளார். வெந்துபோன முகத்துடன் காவல் நிலையத்திற்கு வந்த நடராஜனை போலீசார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)