உலகிலேயே மிக ஆபத்தான நாடுகளில் ஒன்று பாகிஸ்தான் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் அண்மையில் விமர்சனம் ஒன்றை வைத்திருந்தார். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 'எந்தவித ஒழுங்கமைவும் இன்றி அணு ஆயுதங்களை கையாள பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிற உலகிலேயே மிக ஆபத்தான நாடுகளில் ஒன்று என்று குற்றம் சாட்டினார்.
இந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 'அமெரிக்காவை போல நாங்கள் போரில் ஈடுபடவில்லை. அமெரிக்காவை விட பாகிஸ்தானிடம் மிகவும் பாதுகாப்பான அணு சக்தி கட்டுப்பாடு அமைப்பு உள்ளது' என தெரிவித்துள்ளார்.