A village caught in a landslide; 670 people buried in the soil

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 670 பேர் மண்ணில் புதைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான தகவலை அதிகாரப்பூர்வமாக ஐ நா அமைப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

பப்புவா நியூகினியாவில் நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரும் நிலச்சரிவில் தற்பொழுது வரை 670 பேர் மண்ணில் புதைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஏற்கனவே 100 பேர் பலியான அறிவிப்பு வெளியாகிய நிலையில் இந்த தகவல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நிலச்சரிவில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதை கூடசெய்யமுடியாத அளவிற்கு அங்கு மோசமான நிலை நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment