/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay_8.jpg)
பல்வேறு இந்திய வங்கிகளிடம் இருந்து தொழிலதிபர் விஜய் மல்லையா 9000 கோடிக்கு வாங்கிவிட்டு அதை திருப்பி கட்டமால், லண்டனில் தஞ்சமடைந்தார். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வங்கிகள் சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்திய தரப்பு சார்பில், விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டால் மும்பை சிறையில்தான் அடைக்கப்படுவார் என்று தெரிவித்தது.
பிறகு, மல்லையா தரப்பு, மும்பை சிறையில் வெளிச்சம் இருக்காது என்று பல சாக்குகளை சொல்லியது. அதற்காக மும்பை சிறையின் வீடியோ காட்சிகள் வேண்டும் என்று லண்டன் நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில், சிபிஐ சார்பில் மும்பை சிறையன் வீடியோ காட்சி லண்டன் நீதிமன்ற நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கூடிய விரைவில், விஜய் மல்லையா நாடுகடத்தப்பட்டு மும்பை சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)