Skip to main content

அமெரிக்காவில் 12.12 லட்சம் பேருக்கு கரோனா!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

 

usa  12  lakhs coronavirus


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,42,508 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,52,214 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,94,246 ஆக அதிகரித்துள்ளது. 
 

அமெரிக்காவில் மேலும் 24,663 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 12,12,785 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 2,48,301, இத்தாலியில் 2,11,938, பிரான்சில் 1,69,462, பிரிட்டனில்1,90,584, ஜெர்மனியில் 1,66,152, துருக்கியில் 1,27,659, ரஷ்யாவில் 1,45,268, ஈரானில் 98,647, சீனாவில் 82,880, பிரேசிலில் 1,07,844, கனடாவில் 60,774, பாகிஸ்தானில் 20,941, சிங்கப்பூரில் 18,778, மலேசியாவில் 6,353, இலங்கையில் 751, சவுதி அரேபியாவில் 28,656, ஐக்கிய அரபு அமீரகத்தில் 14,730, கத்தாரில் 16,191 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் கரோனாவுக்கு மேலும் 1,318 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 69,915 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஸ்பெயினியில் 25,428, இத்தாலியில் 29,079, பிரான்சில் 25,201, பிரிட்டனில் 28,734, ஜெர்மனியில் 6,993, துருக்கியில் 3,461, ரஷ்யாவில் 1,356, ஈரானில் 6,277, சீனாவில் 4,633, பிரேசிலில் 7,328, கனடாவில் 3,854, பாகிஸ்தானில் 476, சிங்கப்பூரில் 18, மலேசியாவில் 105, இலங்கையில் 8, சவுதி அரேபியாவில் 191, ஐக்கிய அரபு அமீரகத்தில் 137, கத்தாரில் 12 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்