Skip to main content

மனிதனின் உடலில் பன்றியின் சீறுநீரகம் - சாதித்த மருத்துவர்கள்!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

US SURGEONS

 

மனிதர்கள் உடலில் விலங்குகள் உறுப்பை பொருத்தி இயங்கவைக்க முடியுமா என்பது தொடர்பாக, நீண்டகாலமாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் மருத்துவமனையில், பன்றியின் சிறுநீரகம் ஒன்றையே வெற்றிகரமாக மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளது.

 

மூளை சாவு அடைந்த ஒருவருக்கு, சோதனை முறையில் மூன்று நாட்கள் பொருத்தப்பட்டிருந்த இந்த சீறுநீரகத்தின் செயல்பாடு, இயல்பானதாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்பார்த்த அளவு சிறுநீரையும் இந்த சீறுநீரகம் உற்பத்தி செய்தாகவும் அந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

பன்றியின் சீறுநீரகம் மனிதனுக்கு பொருத்தபட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது, மருத்துவதுறையில் ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் விலங்குகளின் உடல் உறுப்பை பொருத்துவதற்கான கதவுகளையும் இந்த சோதனையின் வெற்றி திறந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா? - டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் விளக்கம்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Srikala Prasad - water issue

 

சிறுநீரக கற்கள் ஏற்படாமல் இருக்க எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், என்னென்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என்பது குறித்து டாக்டர்  ஸ்ரீகலா பிரசாத் விளக்குகிறார்

 

தண்ணீரே குடிக்காமல் இருப்பது போல, அதிகமாக தண்ணீர் குடிப்பதும் சிறுநீரகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். தினமும் இரண்டரை லிட்டர் வரை தண்ணீர் குடித்தால் போதும். சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட்டால் அதை குணப்படுத்த மாத்திரைகள் இருக்கின்றன. பெரிய கற்கள் இருந்தால், சிறிய துளை போட்டு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை நீக்கலாம். கற்களின் தன்மையை முழுமையாக ஆராய்ந்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் சிறுநீரக கற்களை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். 

 

அப்படி விடுவதால் கற்களின் அளவு பெரிதாகிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்துவிடுவார்கள் என்று பயப்பட வேண்டாம். உங்களுடைய சிறுநீரக கல்லின் தன்மையைப் பொறுத்து தான் அதற்கான சிகிச்சையும் முடிவு செய்யப்படும். சிறுநீரகத்தில் கற்கள் இருந்து, வலி ஏற்படாமல் இருந்தால் உங்களுடைய சிறுநீரகம் வேலை செய்யவில்லை என்று அர்த்தம். எனவே வலி ஏற்படவில்லை என்பதற்காக கவனமில்லாமல் இருந்து விடாதீர்கள். எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

 

சரியான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் அதிகம் உப்பு சேர்ப்பதால் சிறுநீரக கற்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தயிர் சாதத்தில் உப்பு சேர்க்காதீர்கள். ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். பாட்டிலில் வரும் குளிர்பானங்களைத் தவிருங்கள். மோர், இளநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. பாலில் உள்ள கால்சியம் சத்து உடலுக்கு மிகவும் தேவையானது. எனவே நாம் நிச்சயம் பால் சாப்பிட வேண்டும். பாலை முற்றிலுமாக நிறுத்தினால் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும். எப்போதும் Balanced Diet எடுத்துக்கொள்வதே சரியானது.
 

 

 

Next Story

தந்தையின் மரணம்... நியூயார்க் போலீஸில் சாதித்துக் காட்டிய இந்திய வம்சாவளி பெண்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

new york police pratima bhullar maldonado oppited captain 

 

நியூயார்க் காவல்துறையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த பிரதிமா புல்லர் மால்டோனாடோ என்பவர் தனது ஒன்பது வயது வரையில் இந்தியாவில் வளர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு தான் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து வசித்து வருகிறார். டாக்சி டிரைவராக இருந்த இவரது தந்தை கடந்த 2006 ஆம் ஆண்டு காலமான நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக நியூயார்க் காவல்துறையில் காவலராக இணைந்த பிரதிமா அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரில் உள்ள சவுத் ரிச்மண்ட் ஹில்லில் என்ற இடத்தில் 102வது போலீஸ் வளாகத்தை நடத்தி வருகிறார்.

 

மேலும் தனது கடின உழைப்பால் காவல் துறையில் அடுத்தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்ற பிரதிமாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் காவல்துறையில் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் நியூயார்க் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை பெற்ற இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையுடன், நியூயார்க் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை பெறும் தெற்காசிய பெண் என்ற பெருமையையும் பிரதிமா பெற்றுள்ளார். பிரதிமாவிற்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் பிரதிமாவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.