Skip to main content

அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை தோல்வி!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

US missile test fails

 

ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் போட்டியாக அமெரிக்கா மேற்கொண்ட ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்தது. 

 

அதிகளவில் வெடிபொருட்களை சுமந்து, ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாகச் சென்று தாக்கும் திறன் கொண்டவை ஹைபர் சோனிக் ஏவுகணைகள். ஏற்கனவே, ரஷ்யா மற்றும் சீனா இவ்வகை ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவும் ஹைபர் சோனிக் ஏவுகணைகளைப் பரிசோதனை செய்தது. அலாஸ்காவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்றும், ஏவுகணைக்கான பூஸ்டர்கள் இயங்கவில்லை என்றும் அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இதை மேம்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுத்திருப்பதாகவும் கூறியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமேசான் காட்டில் 17 நாட்கள் தவித்த குழந்தைகள்; நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

amazon forest flight incident four child recover safety

 

கொலம்பியாவில் உள்ள அமேசான் வனப்பகுதியில் இருந்து தனி விமானத்தில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த 1 ஆம் தேதி ஒரு தம்பதியினர் அவர்களது 11 மாதக் குழந்தை உட்பட 4 குழந்தைகளுடன் பயணம் செய்தனர். இவர்கள் சென்ற விமானமானது அமேசான் வனப்பகுதிக்கு மேலே வான்வெளியில் பறந்தபோது விமானி தங்களது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே விமானமானது, விமான நிலையத்துடன் தனது கட்டுப்பாட்டை இழந்தது.

 

இந்நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது. மேலும் இந்த தேடுதல் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 15 ஆம் தேதி விமானத்தின் சில பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட தேடுதல் பணியில் விமானத்தில் பயணம் செய்த விமானி மற்றும் குழந்தைகளின் தாய் மற்றும் தந்தை ஆகிய மூவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

 

மேலும் இந்த விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த குழந்தைகள் பற்றிய விபரம் ஏதும் தெரியாத நிலையில் தொடர்ந்து தேடுதல் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விபத்து நிகழ்ந்த 17வது நாளில் 11 மாத குழந்தை உள்பட 3 குழந்தைகளை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகள் கடந்த 17 நாட்களாக வனப்பகுதியிலேயே சிறிய அளவில் அங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு குடில் போன்று அமைத்து தங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து கொலம்பியா அதிபர் ட்விட்டரில், இந்த தேடுதல் முயற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.  

 

 

Next Story

சூடான் உள்நாட்டுப் போர்; அமெரிக்காவின் கோரிக்கை ஏற்பு

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

american foreign external affairs minister request stop sudan current situation american foreign external affairs minister request stop sudan current situation american foreign external affairs minister request stop sudan current situation american foreign external affairs minister request stop sudan current situation american foreign external affairs minister request stop sudan current situation american foreign external affairs minister request stop sudan current situation american foreign external affairs minister request stop sudan current situation 

 

சூடானை கடந்த 2021 ஆம் ஆண்டில் ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் துணை ராணுவப்படைகளை ராணுவத்தில் இணைப்பது தொடர்பாக ராணுவத் தளபதிக்கும் துணை ராணுவ கமாண்டருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

 

இதனால் அப்போதிலிருந்தே அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது உள்நாட்டுப் போர் நடந்து வந்த நிலையில் மீண்டும் கடந்த சில தினங்களாக சூடான் தலைநகரில் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே தீவிரமாகப் போர் நடந்து வந்தது. இதில் சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம் அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியதாக துணை ராணுவம் அறிவித்தது. இந்தப் போரில் பொதுமக்கள் சுமார் 185 பேர் கொல்லப்பட்டனர். இதில் இந்தியர் ஒருவரும் அடங்குவார். இறந்தவரின் பெயர் ஆல்பர்ட் அகஸ்டின் என்றும் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்திருப்பதாக இந்தியத் தூதரகம் உறுதி செய்தது. முன்னதாக இந்தியத் தூதரகம் சார்பில், சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், நிதானமாகச் செயல்பட்டு வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

american foreign external affairs minister request stop sudan current situation 

ஜப்பானில் நடைபெறும் ஜி 7 மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பேசுகையில், “சூடான் ராணுவத்துக்கு எதிராகப் போர் புரிந்து வரும் துணை ராணுவப் படை அமெரிக்கத் தூதரக வாகனத்தை தாக்கியுள்ளது. இருப்பினும் இந்த வாகனத்தில் பயணித்த அனைவரும் தற்போது நலமுடன் பாதுகாப்பாக உள்ளனர். தூதரக அதிகாரிகள் மீதான இந்த தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இரு தரப்பினரும் 24 மணி நேரம் போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த வேண்டுகோளை ஏற்று ராணுவப் படைத் தளபதி அப்தெல் பத்தா புர்கான் மற்றும் துணை ராணுவ தளபதி டகாலோவும் 24 மணி நேரப் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்  கொண்டுள்ளனர். இந்த போர் நிறுத்தமானது நேற்று மாலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.