Skip to main content

'ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும்' -ஜோ பைடன் வேண்டுகோள்

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

US ELECTION 2020 TRUMP VS JOE BIDEN

 

 

அமெரிக்க  அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம் தேர்தல் முடிவுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

 

அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

 

அமெரிக்காவில் நியூயார்க், வெர்மான்ட், மாசசூசட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர், மேரிலேண்ட், கோலரோடா, இல்லினாய்ஸ், நியூமெக்ஸிகோ, கலிபோர்னியா, வாஷிங்டன் உள்ளிட்ட மாநிலங்களில் ஜோ பைடன்  வெற்றி பெற்றுள்ளார்.

 

US ELECTION 2020 TRUMP VS JOE BIDEN

 

அதேபோல் இண்டியானா, டென்னஸி, தெற்கு கரோலினா, புளோரிடா, டெக்சாஸ் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களை ட்ரம்ப் கைப்பற்றியுள்ளார்.

 

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 வாக்குகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் 238 வாக்குகளும், குடியரசு கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 213 வாக்குகளும் பெற்றுள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் 270 ஆகும்.

 

US ELECTION 2020 TRUMP VS JOE BIDEN

 

இதனிடையே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜோ பைடன், "அமெரிக்க அதிபர் தேர்தலில் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. முழு முடிவுகள் வரும் வரை தமது கட்சி ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டுகோள்" விடுத்துள்ளார்.

 

இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் ஜோ பைடன் கட்சியினர் சதி செய்ய முயற்சிக்கின்றனர். வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால் இனி ஓட்டு போட்டு எதிர்க்கட்சியினரால் வெற்றி பெற முடியாது. மிகப்பெரிய வெற்றி வரப்போவதாகவும் இன்றிரவு அறிக்கை வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

US ELECTION 2020 TRUMP VS JOE BIDEN

 

ட்ரம்பின் ட்விட்டர் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை தவறாக வழிநடத்தும் வகையில் ட்ரம்பின் கருத்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முழுவதும் இன்றிரவுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.