உக்ரைன் நாட்டில் ரஷ்யா போரைத் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. போரை நிறுத்த உலக நாடுகள் மேற்கொண்ட எந்தவொரு முயற்சியும் இதுவரை கைக்கொடுக்கவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் 24- ஆம் தேதி அன்று ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கத் தொடங்கியது. தலைநகர் கீவ், துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றிய ரஷ்யப் படைகள், ஆக்ரோஷமாகத் தாக்குதலை நடத்துகின்றன. போரில் இருந்து தப்பித்து 36 லட்சம் மக்கள், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
உள்நாட்டிலேயே 65 லட்சம் மக்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றன. தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்விலேயே முடிவடைந்துள்ளனர். ரஷ்யா மீதான பொருளாதார தடைகளும் எடுபடவில்லை. இன்றுடன் போர் தொடங்கி ஒருமாதம் நிறைவடைந்து, இரண்டாம் மாதம் தொடங்கியுள்ளது.