/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dsdsss_2.jpg)
முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக விண்கலம் ஒன்றை அனுப்பி சாதனை புரிந்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே இதுவரை செவ்வாய் கிரகத்தை ஆராயும் நோக்கிலான விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளன. இந்நிலையில், இன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான முதல் விண்கலம் ஜப்பானிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஒரு காரின் அளவிலான இந்த விண்கலம் அடுத்த ஏழு மாதங்கள் விண்வெளியில் பயணித்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையைச் சென்றடையும். இது செவ்வாய்க் கிரகத்தின் வானிலை மாற்றங்களை ஆய்வு செய்வதை நோக்கமாக கொண்டதாகும். ஏவுதல் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, அமீரகத்தின் இந்த மிகப்பெரிய கனவுத்திட்டத்தை தலைமையேற்று நடத்திய சாரா அல் அமிரிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)