/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfddfddd_0.jpg)
ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான சட்டம் நேற்று முதல் அந்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது.
அண்மைக்காலமாகப் பெண்கள் உரிமை தொடர்பான பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் அவர்களின் பணிச்சூழல், பாலின சமத்துவம் பின்பற்றப்படல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது அமீரகம். அந்தவகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான சட்டம் நேற்று முதல் அந்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, ஒரு நிறுவனத்தில் ஒரே நிலையில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு ஒரே அளவு ஊதியம் வழங்குவது உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்வர் கார்ஷ் கூறுகையில் “இது ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக எடுத்துவைக்கும் புதிய அடி. சமத்துவம் மற்றும் நீதித்துறையில் இந்த சட்டம் மாற்றங்களை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)