Skip to main content

அமெரிக்க வரலாற்றில் ட்ரம்ப் படைத்த அரிய, மோசமான சாதனை...

Published on 14/01/2021 | Edited on 14/01/2021

 

trump becomes first usa president to face impeachment twice

 

அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டு முறை பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட முதல் அதிபராகியுள்ளார் ட்ரம்ப்.

 

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் 07/01/2021 அன்று கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.  

 

அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறைக்கு அமெரிக்கத் தலைவர்கள் மட்டுமின்றி, பிற உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வன்முறை தொடர்பான வீடியோவை, சமூக வலைதளங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டிருந்த நிலையில் அவரது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ ட்யூப் பக்கங்கள் முடக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவம் மட்டுமன்றி, தனது பதவிக்காலம் முடியவில்லை நிலையில், தனக்கு வேண்டிய குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது, பிற நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது உள்ளிட்ட செயல்களை ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார். 

 

இந்நிலையில், வன்முறைக்கு ட்ரம்ப்பே காரணம் எனக் குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சி, அவரை பதவி விலகக் கோரிக்கை விடுத்தது. அதேபோல, அதிபரைப் பதவி நீக்கம் செய்யும் பதவி நீக்கத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 232 வாக்குகளும் எதிராக 197 வாக்குகளும் கிடைத்தன. இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து அமெரிக்க வரலாற்றிலேயே ஆட்சியில் இருக்கும்போது இரண்டு பதவிநீக்க தீர்மானங்களைச் சந்தித்த முதல் அதிபர் என்ற பெயரை அதிபர் ட்ரம்ப் பெற்றுள்ளார். இதில் ட்ரம்ப்பின் குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் சிலரும் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து ட்ரம்ப்பிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். தகுதி நீக்கத் தீர்மானம் நிறைவேறியுள்ளதால், செனட் அவையில் ட்ரம்ப் மீது விசாரணை நடக்கும். செனட்டில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால், அதிகபட்ச தண்டனையாக,அவர் எந்த அரசு பதவிகளையும் வகிக்கமுடியாத வகையிலான தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'நூலிழையில் தப்பிய டிரம்ப்; சுட்டது யார்?' - வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
 'Who shot Trump? Why?'—external trauma information

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அங்கு தேர்தல் பரப்புரை அமெரிக்காவில் தீவிரம் அடைந்துள்ளது.  இந்நிலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் அதிபர் டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் அதிபர் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் அதிபர் ஒபாமா 'நமது ஜனநாயகத்தில் அரசியல் சார்ந்த வன்முறைகளுக்கு இடம் இல்லை. ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்' என தெரிவித்துள்ளார். அதேபோல் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் 'டிரம்பிற்கு தனது முழு ஆதரவை அளிப்பதாகவும் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறை தலைமை அதிகாரி பதவி விலக வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஒ சுந்தர் பிச்சை, அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டின் போது அவருடைய ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட  ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் டிரம்பை நோக்கி சுட்டவர் 20 வயதான தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்பது தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞரை பாதுகாப்புப் படையினர் பதிலுக்கு தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். மேத்யூ முன்னாள் அதிபர் டிரம்பை நோக்கிச் சுட்ட பொழுது குண்டு அவர் காதினை உரசிச் சென்றுள்ளது. அதனால் ஏற்பட்ட காயத்தில் ரத்தம் வெளிப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் நூலிழையில்  டிரம்ப் தப்பியுள்ளது எஃப்.பி.ஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. உடனடியாக மீட்கப்பட்ட டிரம்ப் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் தற்போது முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவருடைய இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் உள்நோக்கங்கள் என்ன; இதன் பின்னணியில் யார் உள்ளது என்பது தொடர்பாக எஃப்.பி.ஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி’ - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
US President Joe Biden's son case related verdict

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் 46 வது அதிபராக 2021 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவரது மூத்த மகன் ஹண்டர் பைடன் கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ஜோ பைடன் கருத்து தெரிவிக்கையில், “எனது மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.