trump announces covid vaccines will be distributed from next week

அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisment

உலகம் முழுவதையும் முடக்கிப்போட்டுள்ள கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பைசர், மாடர்னா, ஆக்ஸ்ஃபோர்ட், பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறுவனங்களில் தடுப்பூசிகள் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஆகியவை இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளன. இந்நிலையில், அடுத்த வாரம் முதல் அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்க உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாளையொட்டி ராணுவ வீரர்களுடன் காணொளிக்காட்சி மூலமாக உரையாற்றிய ட்ரம்ப், அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்க இருப்பதாகவும், முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், இந்த தடுப்பூசி விரைவாகக் கிடைப்பதற்காக தன்னால் முடிந்த அளவு முயன்றதாகவும், எனவே இதற்கான பெயர் ஜோ பைடனுக்கு சென்றுவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisment