கரோனா, குரங்கு அம்மை பாதிப்புகளை அடுத்து தக்காளி காய்ச்சல் பரவல் அச்சுறுத்தலை கொடுத்துள்ளது. இந்நிலையில் குழந்தைகளை தக்காளி காய்ச்சல் நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என லேன்செட் இதழ் எச்சரித்துள்ளது.
லேன்செட் என்பது வாராந்திர பொது மருத்துவ இதழாகும். இது உலகின் பழமையான, மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்ததாக அறியப்பட்ட பொது மருத்துவ இதழ்களில் ஒன்று. தக்காளி காய்ச்சல் தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருந்த லேன்செட் இதழ், தக்காளி காய்ச்சலை கவனமுடன் கையாண்டு தடுக்க வேண்டும். இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி தக்காளி காய்ச்சல் உயிர் அச்சுறுத்தலை தரக்கூடிய அளவிற்கு தீவிரமானதாக இல்லை என்றாலும் கவனம் தேவை என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்ற மாதம் கடைசி வரை திரட்டப்பட்ட தகவல் அடிப்படையில் 5 வயதிற்குட்பட்ட 82 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது லேன் செட்
.