Skip to main content

விமானத்தில் பயணித்த மூதாட்டி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

Theaddict urinated on the old lady who was traveling in the plane

 

விமானத்தில் பயணித்த மூதாட்டி மீது போதையில் இருந்த நபர் சிறுநீர் கழித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. இதில், குடிபோதையில் பயணம் செய்த ஆண் பயணி ஒருவர் பிஸினஸ் கிளாஸில் பயணம் செய்த மூதாட்டியின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இச்சம்பவம் குறித்து மூதாட்டி விமானப் பணியாளர்களிடம் புகார் அளித்தும் அவர்கள் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். உடையை கழிவறைக்குச் சென்று சுத்தம் செய்து கொண்ட மூதாட்டி, இருக்கைக்குத் திரும்பும் பொழுது இருக்கையில் சிறுநீர் துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து பணியாளர்களிடம் கூறி சுத்தம் செய்து தரச்சொல்லி கேட்டபொழுது இதற்கும் பணியாளர்கள் சரியாகப் பதிலளிக்காமல் இருந்தது மட்டுமின்றி இருக்கையை சுத்தம் செய்தும் தரவில்லை எனக் கூறப்படுகிறது. அவருக்கு மாற்று இருக்கையும் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மூதாட்டிக்கு மாற்று இருக்கை ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். சந்திரசேகரன் இந்த சம்பவத்தினை பொது வெளியில் அம்பலப்படுத்தியுள்ளார். இந்நிலையில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் அறிக்கை கோரியுள்ளது.

 

மேலும், அலட்சியமாக இருந்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

போர் பதற்றம்; விமான சேவை ரத்து!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

air india Flight to Tel Aviv canceled

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் காசா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இன்று காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்குப் பதிலடி தரும் வகையில், ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாகவும், 908 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் போர் பதற்றம் காரணமாகப் பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லியிலிருந்து டெல் அவிவ் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

 

Next Story

தந்தையின் மரணம்... நியூயார்க் போலீஸில் சாதித்துக் காட்டிய இந்திய வம்சாவளி பெண்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

new york police pratima bhullar maldonado oppited captain 

 

நியூயார்க் காவல்துறையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த பிரதிமா புல்லர் மால்டோனாடோ என்பவர் தனது ஒன்பது வயது வரையில் இந்தியாவில் வளர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு தான் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து வசித்து வருகிறார். டாக்சி டிரைவராக இருந்த இவரது தந்தை கடந்த 2006 ஆம் ஆண்டு காலமான நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக நியூயார்க் காவல்துறையில் காவலராக இணைந்த பிரதிமா அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரில் உள்ள சவுத் ரிச்மண்ட் ஹில்லில் என்ற இடத்தில் 102வது போலீஸ் வளாகத்தை நடத்தி வருகிறார்.

 

மேலும் தனது கடின உழைப்பால் காவல் துறையில் அடுத்தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்ற பிரதிமாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் காவல்துறையில் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் நியூயார்க் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை பெற்ற இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையுடன், நியூயார்க் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை பெறும் தெற்காசிய பெண் என்ற பெருமையையும் பிரதிமா பெற்றுள்ளார். பிரதிமாவிற்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் பிரதிமாவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.