Skip to main content

சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

Tharman Shanmugaratnam sworn in as the President of Singapore

 

சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்றுக் கொண்டார்.

 

சிங்கப்பூரில் அதிபராக இருக்கும் ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதற்கு முன்னதாக புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் (வயது 66), இங் கொக் சொங் மற்றும் டான் கின் லியான் என மூன்று பேர் போட்டியிட்டனர். கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவித வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து இவரின் வெற்றியை தேர்தல் ஆணையம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் சிங்கப்பூரின் 9 வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் நேற்று  பதவியேற்றுக் கொண்டார். அதிபராக பதவியேற்றுக் கொண்ட தர்மன் சண்முகரத்னத்திற்கு சர்வதேச அளவில் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும், கல்வி, நிதி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

இரு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

New governors appointed for two states

 

ஒடிசா, திரிபுரா என இரு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

 

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஒடிசா மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் ஒடிசா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த பாஜகவை சேர்ந்த இந்திரா சேனா ரெட்டி நல்லு திரிபுரா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபர் தாஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தவர் ஆவார். மேலும் திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இந்திரா சேனா ரெட்டி நல்லு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம்

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

Additional judges appointed to Madras High Court!

 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட இருவரும் 2 ஆண்டுகள் பணியாற்றுவார்கள். கூடுதலாக 2 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்