thailand restored to normal state after corona comes to end

Advertisment

தாய்லாந்தில் கரோனா தொற்று மற்றும் இறப்பு முற்றிலுமாக பூஜ்ஜியமான நிலையில் தற்போது அங்குத் தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.

சீனாவிலிருந்து பரவத்தொடங்கி கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 46 லட்சம் பேரைப் பாதித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு எதுவும் கண்டறியப்படாத நிலையில், அங்கு பொது முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இதுவரை 3,025 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 பேர் பலியாகியுள்ளனர். 2,855 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த மார்ச் 9 ஆம் தேதி தாய்லாந்தில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய அந்நாட்டு அரசு ஊரடங்கு உத்தரவை வெளியிட்டது. இதனையடுத்து அரசின் தீவிர முயற்சியின் பலனாக அந்நாட்டில் கரோனா பரவல் பெருமளவு குறைக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் கடந்த சில நாட்களாக புதிய பாதிப்போ, மரணங்களோ ஏற்படாத நிலையில் தாய்லாந்து அரசு கடந்த வாரம் ஊரடங்கைத் தளர்த்தியது. இதனையடுத்து அந்நாட்டில் தற்போது தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம்போல இயங்க ஆரம்பித்துள்ளன. கரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், இரண்டாம் அலையைத் தடுப்பதற்கான திட்டமாகப் பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.